உள்ளடக்கத்துக்குச் செல்

உதயணன்

விக்கிநூல்கள் இலிருந்து

உதயணன்

உதயணன் கதை என்ற நூலின் தலைவன். உஜ்ஜயினியல் வாழ்ந்த மன்னன். யாழ் வாசித்து யானையை அடக்கும் கலை அறிந்தவன்.


உதயணன்

உதயணன் கௌசாம்பி நாட்டு மன்னன். யாழ் வாசிப்பதில் சூரன். யாழிசையால் யானையை அடக்கும் கலை அறிந்தவன்.

நூல்கள்

[தொகு]

ஐங்குறுக்காப்பியத்தில் ஒன்றான பெருங்கதை உதயணன்-வாசவதத்தையின் காதல் கதையை சொல்லும். இதன் மூலக்கதை பாலி மொழியில் சொல்லப்பட்டது.

உஜ்ஜயினி நாட்டு மன்னன் பிரத்யோதன், உதயணன் தன்னை விட திறமையானவன் என்று கேட்டு, பொறாமையில் அவனை கைபற்ற கட்டளை இடுகிறான். யாழால் யானையை அடக்கும் உதயணனைப் போரில் வெல்ல முடியாது .எனவே மந்திரியின் தந்திர யோசனையால், ஒரு வெள்ளை நிற மர யானை செய்து இரு நாடுகளின் எல்லையான காட்டில் விடுகிறார்கள். ஒரு காட்டுவாசி இதை உதயணன் இடம் சொல்ல, வெள்ளை யானையை அடக்கும் ஆசையில் யாழுடன் விரைகிறான். மர யானை யாழுக்கு மயங்குமா? அதில் ஒளிந்த்திருக்கும் உஜ்ஜயினி படை உதயணனை கைது செய்து சிறை வைக்கின்றனர். "இதுவா வெற்றி? உங்கள் மன்னன் கோழை", என்கிறான் உதயணன்.

தனக்கு யானை அடக்கும் யாழிசை கற்று கொடுத்தால் விட்டு விடுவதாக பிரத்யோதன் சொல்ல, உதயணன் தட்சணையும் குருமரியாதையும் தந்தால் கற்று தருவேன் என்கிறான். கைதிக்கு மரியாதை கொடுக்க விரும்பாமல், பிரத்யோதன் மறுக்கிறான். தன் உறவினர் ஒருத்தி கூனி என்றும் அவளுக்கு கற்றுக்கொடுக்க தயாரா என பிரத்யோதன் கேட்க, குருமரியாதை தந்தால் கூனிக்கும் கற்று தருவேன் என்று உதயணன் சம்மதிக்கிறான்.

தன் மகள் வாசவதத்தையிடம் உதயணன் குஷ்டரோகி என்று பொய் சொல்லி, இருவருக்கும் இடையில் திரை மூடி பாடம் நடக்கிறது. அவர்கள் திரையை விலக்கி சந்தித்து, காதலித்து, தப்பித்து கௌசாம்பி சென்று மணமுடிகின்றனர்.

ரத்னவள்ளி

[தொகு]

ரத்னவள்ளி என்ற கதையில், உதயணனை மணக்க கப்பலில் வரும் சிங்கள இளவரசி ரத்னவள்ளி, புயலில் சிக்கி, கப்பல் கவிழ்ந்து, அடையாளம் அழிந்து, ஒரு வணிகரின் கப்பலால் காப்பற்றபட்டு, இடம் தெரியாமல் உதயணன் ஆளும் கௌசாம்பிக்கு வருகிறாள். உதயணனின் அமைச்சர் யௌகந்தராயர் அவள் அணிந்த ரத்தின மாலையால் அவளை அடையாளம் கண்டுகொண்டாலும், சாகரிக்கா என்று அவளூக்கு பெயர் சூட்டி வாசவதத்தையின் பணிப்பெண்ணாக வேலையில் சேர்கிறார். காமதேவனுக்கு பூசை செய்யும் போது, வாசவதத்தைக்கு உதயணன் மேல் சந்தேகம் வந்து, ரத்னவள்ளியை அவன் கண் படாமல் அனுப்புகிறாள். ரத்னவள்ளிக்கு உதயணன் மேல் காதல் வந்து அதை சொல்ல முடியாமல் அவனை ஓவியம் வரைகிறாள். அவள் தோழி சூசங்கதை யாரை வரைந்தாய் என வினவ, காமதேவனை வரைந்ததாக சொல்கிறாள். காமனை வரைந்தவள், ரதி மறந்துவிட்டாய் என்று சொல்லி ரத்னவள்ளியை உதயணன் அருகே வரைகிறாள். தோட்டத்தில் தோழன் வசந்தகனுடன் உலா வரும் உதயணன், இந்த ஓவியம் கண்டு மயங்கிவிட, சில காதல் லீலைகளும், குழப்பங்களும், மந்திர வித்தைகளும் நடந்தபின், திருமணத்தில் முடிகிறது.

குறிப்பு

[தொகு]

ராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை தெரிந்த அளவு, தமிழ்நாட்டில் உதயணன் கதை தெரியாதது பரிதாபம். அற்புத கதை. கவித்துவம் மிகுந்த படைப்பாகப் படித்தவர்கள் சொல்கிறார்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=உதயணன்&oldid=9943" இலிருந்து மீள்விக்கப்பட்டது