உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப்படுத்தல்

விக்கிநூல்கள் இலிருந்து

எண்ணிம வடிவில் இல்லாத தகவல் வளங்களை எண்ணிம வடிவுக்கும் மாற்றும் பணி எண்ணிமப்படுத்தல் (digitalization) ஆகும். எண்ணிமப்படுத்தல் பெளதீக எழுத்து அல்லது படங்களை மின்வருடுதல் (scanning), தொடர்முறை அல்லது அனலாக் வடிவில் இருக்கும் ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்களை மாற்றுதல் (conversion), நுண்சுருள்தகடுகளை (microfilms) மின்வருடல் உட்பட்ட செயற்பாடுகளைக் குறிக்கும்.

நெடுங்காலமாக தகவல் வளங்களை நுண்சுருள்தகடுகளிலேயே பாதுகாக்கப்பட்டுவந்தன. ஆனால் இன்று எண்ணிமப்படுத்தல் எண்ணிமப் பாதுகாப்புக்கு தேவையான ஒரு முக்கிய செயற்பாடாக ஆவணகங்களால் நோக்கப்படுகின்றது. நுண்சுருள்தகடுகளிளோடு ஒப்பிடுகையில் குறைந்த செலவு, இலகுவான மேலாண்மை, அணுக்கம் ஆகிய காரணங்களுக்காக எண்ணிமப்படுத்தல் மேன்மையானது.

எல்லா வகையான எண்ணிமப்படுத்தலும் எண்ணிமப் பாதுகாப்புக்குப் பயன்படக்கூடியது அல்ல. மிகவும் உயர்ந்த அனைத்துலக சீர்தரங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் எண்ணிமப்படுத்தலே நெடுங்கால எண்ணிமப் பாதுகாப்புக்கு ஏற்றது.[3] எ.கா எழுத்து ஆவணங்கள் குறைந்தது 400 dpi இல், 24-இரும நிறத்தில், ரிஃப் (TIFF) கோப்பு வடிவில் மின்வருடப்பட வேண்டும்.