எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப் பாதுகாப்புக்குத் தேவையான கட்டமைப்பு
என்ணிமப் பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு, மனித/நிதி வளங்கள், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இணையாகத் தேவைப்படுகின்றன. செயற்பாடுகளை திட்டமிட, நிறைவேற்ற, மேலாண்மை செய்ய அமைப்புத் தேவை. அந்த அமைப்பைக் கொண்டு நடத்த மனித நிதி வளங்கள் தேவை. பாதுகாப்புச் செயற்பாடுகளை நிறைவேற்ற பாரிய தொழில்நுட்ப துறைசார் உள்ளீடுகள் தேவை. இந்த மூன்றினால் கட்டமைக்கப்படும் முக்காலி மேலேயே எண்ணிம ஆவணகம் நிலைநிறுத்தப்படுகின்றது.[6]
ஓர் ஆவணகம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், செயற்பட வேண்டும் என்பதை மேல்நிலையில் வரையறை செய்யும் சீர்தரம் திறந்த ஆவணக தகவல் முறைமை (Open Archival Information System - OAIS - தி.ஆ.த.மு) ஆகும். இது ஆவணகத்தின் பொறுப்புக்கள், ஆவணகத்தின் சூழல், ஆவணகத்துக்குரிய தகவல் மாதிரி (information model), ஆவணகத்தின் செயற்பாட்டு மாதிரி (functional model) ஆகியவற்றை விபரிக்கின்றது. தகவல் வளங்களை விபரிப்பு மீதரவு (descriptive metadata), நிர்வாக மீதரவு (administrative metadata), உரிமைகள் மீதரவு (rights metadata) உட்பட்ட பல்வேறு வகை மீதரவுச் சீர்தரங்களைப் பின்பற்றி பேண வேண்டும்.
ஆவணகச் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புகள் இலவச அணுக்கம் சார்ந்த எண்ணிமப் பாதுகாப்பு, எழுத்தாளர்களுக்கு மதிப்பளித்தல், நெடுங்கால பேண்தகுநிலை, கட்டற்ற சீர்தரங்கள், கட்டற்ற மென்பொருட்கள் உட்பட்ட விழிமியங்களை பின்வற்றுவதன் ஊடாகவே தாங்கள் பாதுகாக்கும் தக