எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப் பாதுகாப்பு என்றால் என்ன?

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

எண்ணிமப் பாதுகாப்பு என்பது எண்ணிமப்படுத்தப்பட்ட அல்லது எண்ணிம வடிவில் உருவான தகவல் வளங்களை நெடுங்காலம் பயன்படக்கூடிய வகையில் பேணிப் பாதுகாத்து அணுக்கம் (access) வழங்குவது ஆகும். இது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (library and information science), ஆவணகவியல் (archival science) துறைகளினதும், தற்போது வளர்ந்துவரும் எண்ணிமப் புலமை (digital scholarship) துறையினதும் துறைசார் அக்கறையும் செயற்பாடும் ஆகும்.

எண்ணிமப்பாதுகாப்பு என்பது எண்ணிமப்படுத்தல், பாதுகாத்தல், அணுக்கம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இது ஆக்கர்கள், நுகர்வோர், மேலாண்மையாளர்கள், ஆவணகம் ஆகியோருக்கிடையேயான ஊடாட்டம் ஊடாக நடைபெறுகின்றது. இந்தக் கூறுகள் பற்றி பிற பிரிவுகளில் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு எண்ணிமப் பாதுகாப்பு என்பதன் வரையறையை கூர்மையாக நோக்கலாம்.

எண்ணிமப் பாதுகாப்பு என்பதை பல்வேறு சீர்தரங்கள் கணக்காய்வுகள் வரையறை செய்கின்றன. இவற்றுள் முக்கியமாவை Trusted Digital Repository (TDR) Checklist அனைத்துலகச் சீர்தரம் (ISO 16363:) ஆகும். இது உயர்ந்த, பலக்கிய சீர்தரம் (advanced and complex standard) ஆகும். சிறிய ஆவணகங்களால் பயன்படத்தக்கூடிய ஒரு வழிகாட்டியை ஐக்கிய அமெரிக்கவின் தேசிய எண்ணிம மேற்பார்வை கூட்டமைப்பு (National Digital Stewardship Alliance (NDSA)) வெளியிட்டுள்ளது. இது எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள் (NDSA’s Levels of Digital Preservation (LoDP)) என்று அறியப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையிலான ஒரு cross walk உம் உண்டு.[1]

எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள்[தொகு]

எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள்
நிலை 1 - உங்கள் தரவினைப் பாதுகாத்தல் நிலை 2 - உங்கள் தரவினை அறிதல் நிலை 3 - உங்கள் தரவினைக் கண்காணித்தல் நிலை 4 - உங்கள் தரவினைத் திருத்துதல்
சேமிப்பும் புவியியல் பரவலும் (Storage and Geographic Location)
கோப்பு அசைவின்மையும் தரவு ஒருமைப்பாடும் (File Fixity and Data Integrity)
Information Security
மீதரவு (Metadata)
கோப்பு வடிவங்கள் (File Formats)

நம்பிக்கையுடைய எண்ணிமக் களஞ்சியம் (Trusted Digital Repository)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The proof is in the standards pudding". avpreserve.com (21 சூன் 2016). பார்த்த நாள் 5 ஆகத்து 2016.