எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப் பொருட்கள் எதிர்நோக்கும் அழிவாபத்துக்கள்
Jump to navigation
Jump to search
எண்ணிம வடிவில் தகவல் இருப்பதால் தகவல் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுவது தவறு. எத்தனை தடவை உங்கள் வேர்ட் (word) செயலி இயங்க மறுத்து உங்கள் கோப்புகள் அழிந்து போயிருக்கும். எத்தனை தடவை உங்கள் கணினி முற்றிலும் செயலிழந்து போயிருக்கும். உங்கள் நுண்பேசிகளை எவ்வளவு வேகமாக இற்றை (update) செய்ய வேண்டி உள்ளது. இவை போன்று, போதிய பாதுகாப்புக்கு உட்படுத்தப்படாத எண்ணிம தகவல் வளங்கள் பாரிய அழிவாபத்தினை எதிர்நோக்கியுள்ளன.[2] இது தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுகள் முன்னிருக்கும் பாரிய சவால் ஆகும்.
எண்ணிமப்பொருட்கள் என்று நிலைத்து நிற்கக்கூடியவை போன்ற ஒர் மாயையைத் தரலாம். ஆனால் எண்ணிமப் பொருட்களும் மிகவும் இலகுவாக அழிவாபத்துக்கு உட்பட்டு நிற்பவையே. அந்த அழிவாபத்துக்களில் பின்வருவன அடங்கும்:
- வன்பொருட்கள் பழுதடைதல் - hardware failure
- மென்பொருள் வழக்கொழிதல் - software obsolescence
- தரங்குறைவான எண்ணிமப்படுத்தல் - poor quality digitization
- தரவுச் சீரழிவு - file corruption
- மீதரவுக் குறைப்பாடுகள் - metadata related risk
- மூடிய சீர்தரங்களும் மென்பொருட்களும்- closed source standards and software