எப்படிச் செய்வது/அறிமுகம்

விக்கிநூல்கள் இல் இருந்து

எப்படிச் செய்வது என்ற நூலில் அன்றாட வாழ்வில் இருந்து தொழிற்துறைகள் வரை நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பல்வேறு விடயங்களைப் பற்றி படிப்படியாக, செய்முறையாக, சுருக்கமாக விளக்கி எழுதப்படுகிறது. இதில் உள்ள பாகங்கள் பள்ளி மாணவர்கள் தொடக்கம் துறைசார் வல்லுனர்கள் வரைக்கும் பயன்படக் கூடியவையாக அமையும். ஆங்கிலத்தில் உள்ள how-to அல்லது Do-It-Yourself இணையாக தமிழில் இவை உருவாக்கப்படுகின்றன. இதில் உள்ள பல பாகங்கள் தனி நூற்களாக வளர்ச்சி அடையக் கூடியவை. அவ்வாறு வளர்சி அடையும் போது அந்த நூலுக்கான இணைப்பை இங்கு தரலாம். இதில் உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் நீங்கள் சேர்க்கலாம்.

கீழே ஆச்சு என்று குறிப்பிடப்பட்ட கட்டுரைகள் ஓரு குறிப்பிட்ட பூர்த்தி நிலையை அடைந்திருக்கின்றது என்பதைக் குறிப்பதற்கே. அவற்றை நீங்கள் மேலும் பல்வேறு வழிகளில் விரிவாக்கலாம். மேலே சுட்டியது போல ஒரு தனி நூலாகக் கூட ஆக்கலாம்.