உள்ளடக்கத்துக்குச் செல்

எப்படிச் செய்வது/தனிநபர் வரவுசெலவுத் திட்டம் செய்வது எப்படி?

விக்கிநூல்கள் இலிருந்து

வரவுசெலவுத் திட்டம் என்பது ஒருவரின் எதிர்கால வருமானத்தை செலவுகள், சேமிப்பு, முதலீடு, கடன் கட்டுதல் ஆகியவற்றுக்கு ஒதுக்குவதற்கான ஒரு நிதித் திட்டம் ஆகும். தனிநபர் வரவுசெலவுத் திட்டம் உருவாக்கிக் கொள்வது தனிநபர் நிதி மேலாண்மையில் ஒர் அடிப்படைச் செயற்பாடு ஆகும்.

வரவுசெலவு ஏன்

[தொகு]
  • என்ன என்னவற்றுக்கு நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிய. உங்கள் செலவுத் தோரணத்தை அறிந்து கொள்ள. செலவுகளைத் திட்டமிட்டுச் செய்ய.
  • உங்கள் நிதி நிலைமையைத் துல்லியமாக அறிந்து கொள்ள.
  • நிதித் திட்டமிடல் செய்வதற்கு உதவியாக. தொலைநோக்கு நிதித் திட்டமிடலுக்காக.
  • நிதி மேலாண்மை ஒழுங்கைக் கடைப்பிடிக்க உதவும் கருவியாக.
  • செலவைக் குறைக்க உதவும் ஒரு கருவியாக.
  • சேமிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க. நிறைவேற்ற.
  • நேரத்துக்கு உங்கள் கட்டணச்சீட்டுக்களை கட்ட.
  • முக்கியமான விடயங்களைக் கண்டறிந்து அவற்றுகு முன்னுருமை கொடுக்க.
  • ஆவணப்படுத்தலுக்காக.

செய்முறை

[தொகு]

பின்வரும் செய்முறை மாதாந்த வரவுசெலவுக்கானது.

1. முதலில் உங்கள் வரி கழியப்பெற்ற வரவுகளைக் குறித்துக் கொள்ளுங்கள். பொதுவாக வரவுகள் உங்கள் வேலை ஊதியமாகவே அமைவதால் இலகுவாக இதைச் செய்து கொள்ளலாம்.
2. அடுத்து உங்கள் மாறா செலவுகளை செலவுகள் பகுதியில் குறித்துக் கொள்ளுங்கள். பொதுவாக இவற்றை உங்கள் கட்டணசீட்டுக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். பின்வருவன பெரிதும் மாறாச் செலவுகளில் அடங்கும்:
  • வாடகை அல்லது அடைமானம்
  • வீட்டுக் காப்புறுதி
  • வீட்டு வரி
  • வீட்டுப் பராமரிப்பு
  • நலக் காப்புறுதி
  • மின்சாரம்
  • தண்ணீர்
  • எரிவாயு
  • தொலைபேசி
  • இணையம்
  • தொலைக்காட்சிச் சேவை
  • வாகன வாடகை
  • வாகனக் காப்புறுதி
3. அடுத்து உங்கள் சேமிப்பு மற்றும் ஆபத்துதவி நிதிக்கு ஒரு தொகையை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இவை சேமிப்பு ஆகினும் செலவுகள் என்ற பகுதிக்குள்ளேயே போகும். பொதுவாக 10% சேமிப்புச் செய்யமாறு நிதி வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆபத்துதவி நிதியாக குறைந்தது 3-6 மாதகாலத்துக்கு முழுச் செலவுக்கும் தேவையான அளவு நிதியைச் சேமிக்குமாறு பரிந்துரை செய்கிறார்கள். அந்தத் தொகை சேரும் வரை ஒரு சிறு பங்களிப்பை அதற்குச் செய்துவிடுங்கள். இந்த ஆபத்துதவி நிதி எதிர்பார்க்காத செலவுகள் வரும் போது உங்களை கடன் அட்டையை நாடிச் செல்வதைத் தவிர்க்கும்.
4. அடுத்து உங்கள் கடன் செலவுகளைக் குறித்துக் கொள்ளுங்கள். கூடிய வட்டி உள்ள கடனுக்கு கூடுதல் தொகை கட்ட முடிந்தால் கட்டி விடுங்கள்.
5. தற்போது, வரவில் இருந்து மேற்கூறிய செலவுகளைக் கழித்துவிடுங்கள். எவ்வளவு மீதியாக இருக்கிறதோ. அந்தளவே உங்கள் மாறும் செலவுகளுக்காக இருக்கின்றது. மாறும் செலவுகளுக்குள் பின்வருவன அடங்கும்:
  • உணவு - பலசரக்கு
  • உணவு - வெளி உணவகங்கள்
  • மருந்து
  • போக்குவரத்து
  • எரிபொருள்
  • உடை
  • ஈடுபாடுகள்/பொழுதுப்போக்குகள்
  • பரிசுப்பொருட்கள்/கொண்டாட்டங்கள்
  • நன்கொடை
  • உறுப்பினர் கட்டணங்கள்
  • பிற
6 தற்போது மொத்த வரவுகளில் இருந்து மொத்த செலவுகளைக் கழித்துப் பாருங்கள். விடை நேர்மமாக இருந்தால் அதனை சேமிப்பிற்கோ அல்லது மாறும் செலவுகளிலோ சேர்க்கலாம். எதிர்மமாக இருந்தால் சமன்படுத்த உங்களுக்கு இரண்டு வழிகள் உண்டு:
  • மாறா/மாறும் செலவுகளைக் குறைத்தல். எ.கா தொலைக்காட்சிச் சேவை இருந்தால் அதனை இரத்துச் செய்யுங்கள்.
  • வருமானத்தைக் கூட்டுதல். எ.கா ஒரு பகுதி நேர வேலையைக் கூடுதலாக எடுத்தல்.


எல்லாச் செலவுகளையும் துல்லியமாகப் பதிவுசெய்தல் வரவுசெலவை நிறைவேற்றுவதில் உள்ள ஒரு சிக்கலான பகுதி ஆகும். இதனைச் சரியாகச் செய்தாலே உங்கல் வரவுசெலவு யதார்த்தமாகவும் சரியாகவும் இருக்கும்.

மாதிரி வரவுசெலவு

[தொகு]
வகை திட்டமிட்ட தொகை உண்மைத் தொகை வேறுபாடு குறிப்புகள்
மொத்த வருமானம்
வரிகள்
நிகர வரவுகள்
மாறாச் செலவுகள்
வீட்டு வாடகை/அடமானம்
வீட்டு வரி
வீட்டுப் பராமரிப்பு
நலக் காப்புறுதி
மின்சாரம்
தண்ணீர்
எரிவாயு
தொலைபேசி
இணையம்
தொலைக்காட்சி சேவைகள்
வாகன வாடகை/அடமானம்
வாகனக் காப்புறுதி
சேமிப்புகள்
சேமிப்பு
ஆபத்துத்துதவி சேமிப்பு
மாறும் செலவுகள்
உணவு - பலசரக்கு
உணவு - வெளி உணவகங்கள்
மருந்து
போக்குவரத்து
எரிபொருள்
உடை
ஈடுபாடுகள்/பொழுதுப்போக்குகள்
பரிசுப்பொருட்கள்/கொண்டாட்டங்கள்
நன்கொடை
உறுப்பினர் கட்டணங்கள்
மொத்தச் செலவுகள்
நிகர வரவுகள் - மொத்தச் செலவுகள் 0.00

வெளி இணைப்புகள்

[தொகு]