எப்படிச் செய்வது/பணம் சேமிப்பது எப்படி?
Appearance
வீடு
[தொகு]- அறைத்தோழருடன், குடும்பத்துடன் அல்லது உறவினர்களுடன் வீட்டை, வீட்டின் செலவுகளைப் பகிருங்கள்.
- வாடகைக்கு இருப்பது சேமிப்பாக, உங்கள் வாழ்முறையுடன் ஒத்து இருந்தால் வாடகைக்கு எடுங்கள், மிகுதிப் பணத்தை சேமிப்பில் இடுங்கள்.
- அளவான சிறிய வீடாக வாங்குங்கள், அல்லது வாடகைக்கு எடுங்கள்.
- தொலைக்காட்சி சேவைகளை இரத்துச் செய்யுங்கள்.
- நிலத் தொலைபேசியை இரத்துச் செய்யுங்கள்.
- மழைநீர் சேகரிப்புச் செய்யுங்கள்.
ஆற்றல்
[தொகு]- முதலீடு செய்ய முடிந்தால், சூரிய கலங்களில் இருந்து ஆற்றல் பெறுங்கள்.
- பயன்படுத்தாத அறைகளில் விளக்குகளை அணையுங்கள்.
- சூரிய ஒளி கிடைக்குமாயின் சன்னல்களைத் திறந்து விட்டு அதன் ஊடாக வெளிச்சத்தைப் பெறுங்கள்.
- குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் மின்விளக்குகளைப் பயன்படுத்துங்கள். எ.கா சி.எப்.எல் (CFL)
- உயர் ஆற்றல் திறன் மிக்க கருவிகளைப் பயன்படுத்துங்கள். எ.கா எனேர்சி இசுடார் (energy star) உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருவிகள்.
- கணினி, தொலைக்காட்சி போன்ற கருவிகளை பயன்படுத்தி முடித்தவுடன் நிப்பாட்டி விடுங்கள்.
- கோடை காலத்தில், வீட்டின் சன்னல்களைத் திறந்து விட்டு குளிரூட்டி பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
- கோடை காலத்தில் குளிரூட்டிக்கு மாற்றாக மின் விசிறியைப் பயன்படுத்துங்கள்.
- குளிரூட்டியைப் பயன்படுத்தாதீர்கள்.
- குளிர்காலத்துக்கு ஏற்ற மாதிரி உங்கள் வீட்டைப் பாதுகாவுங்கள்.
- குளிர் காலத்தில் வீட்டில் சூடேற்றி இருந்தால் அதன் வெப்பநிலையை இயலுமான அளவு குறையுங்கள்.
- வீட்டில் நீர் சூடேற்றி இருந்தால் அதன் வெப்பநிலையை இயலுமான அளவு குறையுங்கள்.
உணவு
[தொகு]- சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- வீட்டுத் தோட்டம் ஒன்று வையுங்கள்.
- வெளியில் உணவு உண்ணுவதைத் தவிருங்கள்.
- வேலைக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லுங்கள்.
- சோடா மற்றும் குளிர்பானத்தைத் தவிர்த்து தண்ணீரை அருந்துங்கள். அது உடலுக்கும் நல்லது.
- அருகாமையில் காடு இருந்தால் அங்கு சென்று பழங்கள், காளான் போன்றவற்றை பெறக் கற்றுக் கொள்ளுங்கள்.
- அருகாமையில் காடு இருந்தால் அங்கு சென்று விலங்குகளை வேட்டையாடக் கற்றுக் கொள்ளுங்கள்.
- மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- சொட்டுத் தீனி, சிறப்பு உணவுகளை அளவோடு உண்ணுங்கள்.
- மதுபானங்களைத் தவிருங்கள் அல்லது குறையுங்கள்.
- மரக்கறி உணவுக்கு மாறிவிடுங்கள். இறைச்சி, கடலுணவுகள் பொதுவாக விலை கூடியவை.
- சுற்றுலா செல்வதானால் உணவையும் நீரையும் நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.
- தேவைக்கு அதிகமாகச் சமைக்காதீர்கள். உணவை வீணாக்காதீர்கள், கொட்டாதீர்கள்.
- சத்துள்ள தரமான உணவாக வாங்குங்கள்.
- போத்தில் தண்ணீர் வாங்குவதை நிறுத்துங்கள். தேவைப்படின் தண்ணீரைச் சுடவத்து அல்லது வடிகட்டிக் குடியுங்கள்.
- பருவத்தில் விளையும் உணவுகளை வாங்குங்கள். அவை விலை மலிவாக இருக்கும்.
- உள்ளூர் உணவுகளை வாங்குங்கள்.
- உழவர் சந்தையில் பொருட்களை வாங்குங்கள்.
உடை
[தொகு]- தைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- தரமான ஒரு தொகுதி உடைகளை வாங்குங்கள், நீண்டகாலம் பயன்படுத்துங்கள்.
- புதிய உடைகளை அடிக்கடி வாங்காதீர்கள்.
- ஒரு நாள் அல்லது ஒரு பயன்பாட்டு உடைகளை வாங்காமல், வாடகைக்கு அல்லது இரவல் எடுக்க முடியுமா என்று பாருங்கள்.
- உறவினர்கள் பயன்படுத்திய உடைகளை மீள் பயன்படுத்துங்கள்.
- பயன்படுத்தப்பட்ட உடைகளை வாங்குங்கள்.
போக்குவரத்து
[தொகு]- பயணங்களைக் குறையுங்கள்.
- பல பல சிறு வேலைகள் இருந்தால் அவற்றை எல்லாம் ஒன்றாக ஒரே பயணத்தில் செய்யுங்கள்.
- குறைந்த செலவு போக்குவரத்து வழியைப் பயன்படுத்துங்கள், எ.கா: நடை, மிதிவண்டி, பொதுப் போக்குவரத்து, தானுந்துப் பகிர்வு.
- தானிந்தை விட விசையுந்தை வாங்குங்கள்.
தானுந்து
[தொகு]- அடிப்படைத் தானுந்துப் பராமரிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள். சரியாகப் பராமரியுங்கள்.
- தானுந்து தேவை எனின், சிறிய ஆடம்பரம் அற்ற தானுந்தை வாங்குங்கள்.
- பழைய தானுந்தை வாங்குங்கள்.
- கவனமாக வாகனம் ஓட்டுங்கள், விபத்துக்களை இயன்றவரை தவிருங்கள்.
- தானுந்தின் வேகத்தை அடிக்கடி முடிக்கி விடுவதையும், திடீர் என்று தடுப்புப் போடுவதையும் தவிருங்கள். இப்படிச் செய்வதால் ஆற்றல் வீணாகும்.
- நெடுஞ்சாலையில் அதி வேகமாக ஓடாதீர்கள். உங்கள் வாகனத்தின் உச்ச திறன் வேகம் அறிந்து அந்த வேகத்துக்கு ஓட்டுங்கள். அதி வேகமாக ஓட்டுவதால் ஆற்றல் வீணாகும்.
- சிகப்பு இணைப்பு வருகிறது என்று தெரிந்தவுடன் அமுக்குவதை நிறுத்தி உந்து வேகத்தில் ஓட விடுங்கள்.
- ஒரு தொட்டி (tank) எரிபொருளில் எத்தனை நாள் ஓட்டலாம் என்று முயன்று பாருங்கள்.
- வாகனம் ஓட்ட முழுத் தகுதையும் பெறுங்கள். இது உங்கள் காப்புறுதியைக் குறைக்கும். (சில நாடுகளில்)
- வாகனம் ஒட்டுவது தொடர்பான வகுப்புக்களுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெறுங்கள். இது உங்கள் காப்புறுதியைக் குறைக்கும். (சில நாடுகளில்)
நலம்
[தொகு]- புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.
- அதிகமாக மதுபானம் அருந்துவதை நிறுத்துங்கள்.
- உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- சத்துணவு பற்றி அறிந்து அதை உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- உடற்பயிற்சி நிலையத்துக்கு கட்டணம் செலுத்தாமல், பூங்கா சென்று ஓடுங்கள், நடவுங்கள், விளையாடுங்கள்.
கல்வி
[தொகு]- உங்கள் கல்விக்கு இணையத்தைப் பயன்படுத்துங்கள்.
- நண்பர்களிடம், அல்லது திறன் பண்டமாற்று வலைத்தளங்கள் ஊடாக கல்வியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தூய்மையாக்கல்
[தொகு]- கையால் தோயுங்கள்.
- சூரிய ஒளியில் உலரவிடுங்கள்.
- கை துடைக்க, துப்பரவு செய்ய காகிதத் துவாய்களைப் பயன்படுத்தார்கள், மாற்றாக துணியைப் பயன்படுத்துங்கள்.
- பாத்திரங்களைக் கழுவ கரியைப் பயன்படுத்துங்கள்.
- நீங்களே தேவையான தூய்மையாக்கல் பொருட்களை உருவாக்குங்கள்.
நிதி
[தொகு]- யதார்த்தமான வரவுசெலவு உருவாக்கிப் பின்பற்றுங்கள்.
- தேவை எது, ஆசை எது என்பதை உணர்ந்து தேவைகளுக்கு முன்னுருமை கொடுங்கள்.
- சிக்கனம் கடைப்பிடித்து கடனை அடையுங்கள்.
- ஒவ்வொரு சம்பளத்தில் இருந்தும் குறிப்பிட்ட அளவு சேமிப்புக்கு தானாக செல்லும் படியாக வங்கியில் ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
- ஆபத்துத் தேவைகளுக்கு என்று 3-6 மாதங்களுக்கு உங்கள் வாழ்க்கையை நகர்த்தத் தேவையான பணத்தைச் சேமித்து வையுங்கள். குறைந்த பட்சம் திடீர் விபத்து அல்லது மருத்துவ தேவைகளை சமாளிக்கத் தேவையான ஆபத்துதவித் தொகையை சேமியுங்கள். இதனால் உயர் வட்டிக் கடன் அட்டையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
பொருள் வாங்கல்
[தொகு]- பொருட்களை வாங்குவதற்கென அங்காடிகள் செல்வதைத் தவிருங்கள்.
- வாங்குவதைக் குறையுங்கள். பகிர்வை, கூட்டு நுகர்வைக் கூடுதலாகப் பயன்படுத்துங்கள்.
- தளபாடங்கள், கருவிகள் மற்றும் பிற பொருட்களை வாங்க முன்பு இணையத்தில் கிறக்பட்டியல் (criglist), இலவசப் பகிர்வகங்கள் (freecycle) போன்றவற்றில் கிடைக்கின்றனவா என்று பாருங்கள்.
- விலை ஒப்பிட்டி, ஆய்வு செய்து பொருட்களைக் கொள்வனவு செய்யுங்கள்.
- பெயருக்காக வாங்காமல், பயன்பாட்டையும் தரத்தையும் கருத்தில் கொண்டு வாங்கிங்கள்.
- கழிவு விலையில் உள்ளதா, கழிவிச் சீட்டைப் பயன்படுத்தலாமா என்று அறிந்து அவற்றைப் பயன்படுத்துங்கள்.
- பேரம் பேசி வாங்கிங்கள்.
- பெரிய பொருட்களை திட்டமிட்டுச் சேமித்து வாங்குங்கள்.
- என்ன தேவையான பொருட்கள் என்று பட்டியல் இட்டு, பொறுத்திருந்து வாங்கிங்கள்.
- பெரும் நிறுவனங்கள் ஆயில் அவ்வபோது தொலைபேசி எடுத்து முறையீடு செய்து, பேரம் பேசி சேவைகளுக்கான பணத்தைக் குறைக்கக் கேளுங்கள். இல்லாவிடின் போட்டி நிறுவனத்துக்கு சென்றுவிடிவீர்கள் என்று வெருட்டுங்கள்.
பொழுது போக்கு
[தொகு]- நூல்கள்/இதழ்கள்/நிகழ்படங்கள்/இறுவட்டுக்கள் போன்றவற்றுக்கு நூலகத்தைப் பயன்படுத்துங்கள்.
- பூங்கா, காடு, அருங்காட்சியகங்கள் கட்டணம் இல்லாத அல்லது குறைந்த இடங்களுக்குச் செல்லுங்கள்.
- பலகை விளையாட்டுக்கள், சீட்டாட்டம் போன்றவற்றை( பணமதிப்புளள பணையம் தவிர்த்து) ஆடுங்கள்.
பரிசளிப்பு
[தொகு]- உங்களுக்குப் பரிசாக தரப்பட்டவற்றை பிறருக்கு பரிசாக அளித்தல்.
- நீங்கள் சமைத்த உணவை எடுத்துச் செல்லல்.
- நீங்கள் செய்த பிற பொருட்கள்.
- சிந்தித்து, நினைவுகளைத் தூண்டும் பரிசுகள்.
- விலை அதிகமான அட்டைகளை (cards) வாங்குவதை விடுத்து கையால் செய்தத அட்டைகளை அல்லது கவிதைகளைக் கொடுக்கலாம்.
விடுமுறை
[தொகு]- உள்ளூரிலேயே நீங்கள் பார்க்காத இடங்களைச் சுற்றிப் பார்த்தல்.
- பிற நாடுகளில் அல்லது இடங்களில் உள்ள உங்கள் உறவர்களைச் சென்று பார்த்தல். அங்கு தங்கி சுற்றுலாச் செய்தல்.
- நேரப்பகிர்வு (timeshare) உங்களின் நண்பர்களிடம் இருந்து வாங்குங்கள்.
குறைப்பு, மீள்பயன்பாடு, மறுசுழற்சி
[தொகு]- நெகிழிப் (plastic) பைகளைத் தவிர்த்து, மீள் பயன்படுத்தக் கூடிய பைகளை (துனி, காகிதம் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்டவை) பயன்படுத்துங்கள்.
- பைகளை மீள் பயன்படுத்துங்கள்.
- பொருட்கள் வரும் தகரங்கள், பெட்டிகளை மீள் பயன்படுத்துங்கள்.
- பழந்துணிகளை வீட்டின் வேறு வேலைகளுக்குப் பயன்படுத்துங்கள்.
- பழம் பத்திரிகைகளை, காகிதங்களைப் மீள் பயன்படுத்துங்கள். பொருட்களை உலரவிட, கட்டிக் கொடுக்க போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படலாம்.
- மீள் பயன்படுத்தக் கூடிய தண்ணீர் போத்திலைப் பயன்படுத்துங்கள்.
- எறியப்படும் கிண்ணங்களையோ, கோப்பைகளையோ வீட்டில் பயன்படுத்தாதீர்கள்.
- எறியப்படும் தண்ணீர் போத்தில்களைத் தவிர்த்து, மீள் பயன்படுத்தக் கூடிய கண்ணாடி அல்லது அலுமினிய தண்ணீர் போத்தில்களைப் பயன்படுத்துங்கள்.
பகிர்தல், பண்டமாற்று, கூட்டு நுகர்வு
[தொகு]- நூல்களைப் பகிரும் நூலகங்கள் போல கருவிகள், வாகனங்கள், இடம் எனப் பலவற்றைப் பகிரும் பகிர்வகங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நேரடியாகவோ, அல்லது இணையம் ஊடாகவோ உங்களிடம் உள்ள பொருட்களையும் திறங்களையும் ஒருவொருக்கொருவர் பண்ட மாற்றிக் கொள்வதால் பணத் தேவையைக் குறைக்கலாம்.
திருத்தல், தானே செய்தல்
[தொகு]- சமைத்தல், தைத்தல், கற்பித்தல், வாகனப் பராமரிப்பு, உணவு உற்பத்தி, திருத்தல் வேலைகள், தூய்மைப்படுத்தல், அடிப்படை மருத்துவம் என்று பல்வேறு அடிப்படை வேலைகளை தாமே செய்வது.
- பொருட்கள் உடைந்துவிட்டால் உடனே எறிந்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவதைத் இயன்றவரைத் தவிருங்கள். நீங்களே திருத்தப் பாருங்கள்.
வெளி இணைப்புகள்
[தொகு]- சிறுக கட்டி பெருக வாழ்வோம்! - (தமிழில்)
- பணத்தை சேமிக்க பல வழிகள் - (தமிழில்)
- 168 Frugal Tips to Stretch Your Dollar When Times are Tight - (ஆங்கிலத்தில்)