உள்ளடக்கத்துக்குச் செல்

எமிலி, அல்லது கல்வி பற்றி/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

[1]நான் வரிசையற்றதாக தொடங்குகிறேன்; ஒரு நல்லத் தாய் குறிப்பி-1 எவ்வாறு சிந்திக்கிறாள் என்பதை உணர்த்தும் விதமாக அநேகமாய் முடிவற்ற எண்ணங்களையும், கண்காணிப்புகளையும் இங்கு தருகிறேன். முதலில் இந்த நினைவுக் குறிப்பை சில பக்கங்களுக்கே எழுத திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்னையும் மீறி என்னுடைய இத்தலைப்பு என்னை இட்டுசென்றது மற்றும் என்னையும் அறியாமல் இந்த நினைவுக்குறிப்பு ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போல், எது உள்ளடக்க வேண்டுமோ அது அது உண்மையில் மிக அதிகமாக, எதைச் சொல்ல எண்ணினேனோ அது குறைவாகவும் செய்திருக்கிறேன். நீண்ட நாட்களாக நான் இதை வெளியிடவா, வேண்டாமா என தயங்கினேன், மேலும் இது சில வெளியீடுகளை எழுதுவது ஒன்றும் ஒருவருக்கு ஒரு நூலை எவ்வாறு இயற்றுவது என்று கற்றுதராது என அவ்வப்போது நான் நினைத்துக் கொண்டேன். இதை மேம்படுத்தும் வீண் முயற்சிக்கு பிறகு, இந்த தலைப்பு நேரடி மக்கள் கவனிப்புக்கு மிக முக்கியம் என்பதால், நான் இதை எப்படி முதலில் எழுதினினேனோ அவ்வாறே கொடுக்க வேண்டும் என நம்பினேன். எப்பொழுதெல்லம் எனது எண்ணம் சிறப்பில்லாமல் ஆகிறதோ, அப்பொழுது வேறு யாரையேனும் நல்லவற்றை கொண்டு வரவைத்தால், நான் என்னுடை நேரத்தை முழுமையாக வீணடிக்கமாமல் இருந்திருப்பேன். என்ன எண்ணங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்பதை கூட அறியாமல், யாரும் விளம்பரம் செய்யாமல், யாரும் அதனை பாதுகாக்காமல், பொதுமக்களின் முன்பு ஒருவன் தனிமைப் பின்னடைவை குறிப்பு-2 எழுத்துக்களால் வார்த்து எடுக்கும் பொழுது, தவறானவர்கள் அதனை நன்கு அறியாமல் அவனது பிழைகளை ஏற்றுக்கொள்வார்கள் என கவலையுறத் தேவையில்லை.