ஒற்றாடல்
Appearance
திருக்குறள் > அரசியல்
- 581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
- தெற்றென்க மன்னவன் கண்.
- 582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
- வல்லறிதல் வேந்தன் தொழில்.
- 583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
- கொற்றங் கொளக்கிடந்தது இல்.
- 584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
- அனைவரையும் ஆராய்வது ஒற்று.
- 585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
- உகாஅமை வல்லதே ஒற்று.
- 586. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
- என்செயினும் சோர்விலது ஒற்று.
- 587. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
- ஐயப்பாடு இல்லதே ஒற்று.
- 588. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
- ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
- 589. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
- சொற்றொக்க தேறப் படும்.
- 590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
- புறப்படுத்தான் ஆகும் மறை.