கட்டிடக்கலை

விக்கிநூல்கள் இலிருந்து
பழங்கால எகிப்தியக் கோயில் ஒன்றின் அழிபாடு

மனிதர்கள் வாழுவதற்கும் வேறு பல தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது. கட்டிடங்களை வடிவமைப்பவரைக் கட்டிடக் கலைஞர் என அழைப்பர். கட்டிடக்கலை ஒரு மிகப்பழைய துறை ஆகும். உண்மையில் மனிதன் தனக்கென குடிசைகளை அமைக்கத் தொடங்கியபோதே கட்டிடக்கலை உருவாகிவிட்டது எனலாம். ஆனாலும் அக்காலத்தில் கட்டிடங்களை வடிவமைப்பதற்குத் தனியான ஒரு துறை இருக்கவில்லை. ஒவ்வொரு குடும்பமும் அல்லது குழுவும் தமது வீடுகளைத் தாமே கட்டிக்கொண்டனர்.

பெரிய கட்டிடங்கள் அல்லது முக்கியமான கட்டிடங்கள் அமைக்கவேண்டி ஏற்பட்டபோதே கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டத் தனியான ஒரு தொழில் உருவானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடக்கலைத் துறை இருந்தது என்பதை உலகின் பல பகுதிகளிலும் இன்று அழிந்த நிலையில் காணப்படும் பழங்காலக் கட்டிடங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

எகிப்து, பபிலோனியா, சிந்துவெளி ஆகிய இடங்களில் மிகப்பழைய கட்டிட அழிபாடுகளைக் காணலாம்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=கட்டிடக்கலை&oldid=17835" இலிருந்து மீள்விக்கப்பட்டது