கனவு நிலை உரைத்தல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > கற்பியல்

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.


1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.


1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.


1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.


1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.


1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.


1217. நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.


1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.


1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.


1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.


"https://ta.wikibooks.org/w/index.php?title=கனவு_நிலை_உரைத்தல்&oldid=2882" இருந்து மீள்விக்கப்பட்டது