கள்ளாமை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > துறவறவியல்

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.


282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.


283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.


284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.


285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.


287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.


288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.


289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.


"https://ta.wikibooks.org/w/index.php?title=கள்ளாமை&oldid=2713" இருந்து மீள்விக்கப்பட்டது