காதற் சிறப்பு உரைத்தல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > களவியல்

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.


பாலும் தேனும் கலந்த நீரை போன்றது, இப்பாவையின் வாயில் ஊறிய நீர்.

1122. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.


உடலுக்கும் உயிருக்கும் என்ன உறவு உள்ளதோ, அதை போன்றதே எனக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே உள்ள உறவாகும்.


1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.


1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.


1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.


1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.


1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.


1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.


1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.


1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.