குறிப்பறிதல்
Appearance
திருக்குறள் > களவியல்
- 1091. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
- நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
- 1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
- செம்பாகம் அன்று பெரிது.
- 1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
- யாப்பினுள் அட்டிய நீர்.
- 1094. யான்நோக்கின் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
- தான்நோக்கி மெல்ல நகும்.
நான் அவளை பார்க்கும் பொழுது, அவள் நிலத்தை பார்த்தபடி இருக்கிறாள், பார்க்காத நேரத்தில் என்னை நோக்கி புன்னகைக்கிறாள்.
- 1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
- சிறக்கணித்தாள் போல நகும்.
- 1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
- ஒல்லை உணரப் படும்.
- 1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
- உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
- 1098. அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
- பசையினள் பைய நகும்.
- 1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
- காதலார் கண்ணே உள.
- 1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
- என்ன பயனும் இல.