குழந்தைப் பாடல்கள்/ஆட்டுக்குட்டி

விக்கிநூல்கள் இலிருந்து

ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி

அங்கும் இங்கும் ஓடுது

துள்ளித் துள்ளி எகிறியே

தாவித் தாவிக் குதிக்குது!

வாலையாட்டித் தாயிடம்

பாலை முட்டிக் குடிக்குமே

ஓலைக் குருத்துக் கால்களால்

ஓடியாடி மகிழுமே!