குழந்தைப் பாடல்கள்/குண்டுப்பையன்

விக்கிநூல்கள் இலிருந்து

குண்டுப் பையன் சுண்டுவாம்

சுவரின் மேலே உட்கார்ந்தான்

சுண்டு கீழே விழுந்தானே

துண்டு துண்டாய் உடைந்தானே


துண்டு துண்டாய்ப் போனவனை

தூக்கி நிறுத்த முடியலையே

ராஜா வந்தும் முடியலையே

ராணுவம் வந்தும் முடியலையே