உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைப் பாடல்கள்/கைவீசு

விக்கிநூல்கள் இலிருந்து

கைவீசம்மா கைவீசு

கடைக்குப் போகலாம் கைவீசு


மிட்டாய் வாங்கலாம் கைவீசு

மெதுவாய்த் தின்னலாம் கைவீசு


சந்தைக்குப் போகலாம் கைவீசு

சர்க்கரை வாங்கலாம் கைவீசு


ரயிலில் போகலாம் கைவீசு

ராட்டினம் ஆடலாம் கைவீசு


சொக்காய் வாங்கலாம் கைவீசு

சொகுசாய்ப் போடலாம் கைவீசு


கோவிலுக்குப் போகலாம் கைவீசு

கும்பிட்டு வரலாம் கைவீசு.