குழந்தைப் பாடல்கள்/தவளையார்
Jump to navigation
Jump to search
தத்தித் தத்தித் தவளையார்
தாவித் தரையில் பாய்கிறார்
கத்திக் கத்தி இரவெல்லாம்
கண்ணை விழித்துப் பாடுகிறார்
கிட்டே பாம்பு வந்ததும்
எட்டி அஞ்சி ஓடுகிறார்
அருகில் நீரைப் பார்த்ததும்
எகிறித் தாவிக் குதிக்கிறார்.