குழந்தைப் பாடல்கள்/நிலா

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வடிவம் 1[தொகு]

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரமாய் சுற்றி வா

வடிவம் 2[தொகு]

நிலா நிலா!
ஓடி வா
நில்லாமல்
ஓடி வா
மலை மேலே
ஏறி வா
மல்லிகைப் பூ
கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்