குழந்தைப் பாடல்கள்/மழை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடல்-1


பேயுதம்மா பேயுதம்மா

பேயாய் மழை பேயுது


ஊசி போல மின்னி மின்னி

ஊரெல்லாம் பேயுது


பாசி போல மின்னி மின்னி

பட்டணம் எல்லாம் பேயுது


ஈசுவரன் கிருபையாலே

எங்கெங்கும் பேயுது


மாயவன் கிருபையாலே

வந்து மழை பேயுது


பாடல் -2[தொகு]

மழை வருது மழை வருது

நெல்லு அள்ளுங்க


முக்காப்படி அரிசி போட்டு

முறுக்கு சுடுங்க


ஏரோட்டும் மாமனுக்கு

எண்ணி வையுங்க


சும்மா இருக்குற மாமனுக்கு

சூடு வையுங்க