குழந்தைப் பாடல்கள்/வண்ணத்துப் பூச்சி
Jump to navigation
Jump to search
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்
சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
தொட்டது முடனே தொட்டது முடனே
பட்டது பார் பட்டது பார்
பூக்களின் மேலே பூக்களின் மேலே
பறந்து போய் பறந்து போய்
தேனதை உண்டு தேனதை உண்டு
களிக்குது பார் களிக்குது பார்
எழுதியவர்: -வித்துவான் க. வேந்தனார்