ஜாவா/இலக்கணம்

விக்கிநூல்கள் இலிருந்து

ஜாவா படிப்பதற்கு அடிப்படை நிரலாக்கம் தெரிந்திருப்பது நல்லது. ஏற்கனவே, சி போன்ற எளிய மொழிகளைப் படித்திருந்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். ஜாவாவின் இலக்கணத்தில் பெரிதளவில் சி நிரல் மொழியின் தாக்கம் இருக்கும். எனவே, சி தெரிந்தவர்களுக்கு ஜாவா எளிதாய் இருக்கும். I

கருத்துரை[தொகு]

நிரல்களின் இடையே கருத்துகளை இடுவதற்கு கருத்துரை பயன்படும். இவை கட்டாயம் இடம்பெறுபவை அல்ல. ஆனால், பயனர்களின் புரிதலுக்கு தேவைப்படலாம். ஒரு வரி கருத்துரைக்கு, //கருத்து எனத் தரலாம். தொடர்ச்சியாக பல வரிகளில் கருத்துகளை இட, /* கருத்து கருத்து கருத்து

  • /

என இட வேண்டும்.

கருத்துகளால் நிரலில் பாதிப்பு எதுவும் இருக்காது. என்ன செய்திருக்கிறோம் என்பதை தெரிவிக்க கருத்துகளைப் பயன்படுத்தலாம். கருத்துகள் தமிழ் உட்பட எந்த மொழியிலும் எழுதப்படலாம். வேறு ஒருவர் எழுதிய நிரலை மற்றொரு நிரலர் புரிந்துகொள்ள கருத்துகள் பெரியளவில் உதவும்.

தரவினங்கள்[தொகு]

ஜாவாவில் தரவு இனங்கள் (data types) உண்டு. ”சி”யில் உள்ள பெரும்பாலான தரவு இனங்களை இதிலும் காணலாம். அடிப்படையானவற்றைக் காணலாம்.

  • int
  • float
  • double
  • short
  • long

உள்ளிட்ட தரவு இனங்கள் உண்டு. இது தவிர, பொருளை அடிப்படையாகக் கொண்ட வகைகளும் உண்டு. நீங்கள் விரும்பும் எந்த ஒரு பொருளையும் ஜாவாவில் வர்ணித்து, அதன் செயல்பாடுகளையும், பண்புகளையும் குறிப்பிடலாம். அதுவும் ஒரு தரவு இனமாக செயல்படும். எடுத்துக்காட்டாக, மனிதன் என்பதை பொருளாக எடுத்துக்கொண்டால், அவனில் செய்கைகளை (functions) செயல்களாகவும், அவனைப் பற்றிய தகவல்களை தரவாகவும் (data) சேமிக்கலாம். இனி, எத்தனை மனிதர்களையும் இந்த பொருளைக் கொண்டு உருவாக்கலாம். அத்தனைக்கும் இந்த செயல்பாடுகளும், தகவல்களும் பொருந்தும்.

நிரல் குறியீடுகள்[தொகு]

  • ”;” - என்ற குறியீடு வரியின் முடிவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஜாவா/இலக்கணம்&oldid=15705" இலிருந்து மீள்விக்கப்பட்டது