ஜாவா/முக்கியத்துவம்

விக்கிநூல்கள் இலிருந்து

ஜாவாவின் முக்கியத்துவம் பற்றி காண்போம்.

1. பயன்பாடு: அதிகளவிலான மென்பொருள்கள் ஜாவாவிலேயே செய்யப்படுகின்றன. இணையத்திலும் ஜாவாவின் ஆதிக்கம் உண்டு. ஏற்கனவே, பல ஆயிரம் கருவிகளில் ஜாவா இயங்குகிறது.
2. பண்புகள்: ஜாவாவின் பண்புகள் பலம் வாய்ந்தவை. இவற்றினால் இது அழியா வரம் பெற்றதுபோல் உள்ளது.
3. பிற மொழிகளுடன் இணைந்து செயல்படும் தன்மை (பைத்தான், சி ஆகியவற்றில் எழுதிய நிரல்களுடனும் இணைந்தும் செயல்படும்.)
4. பிற கருவிகளுடன் இணைந்து பணியாற்றும் தன்மை (வலையமைப்பு, தரவுத்தளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தளங்களிலும் இயங்கும்.)
5. இதனை மற்ற மென்பொருட்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
6. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும்.
7. இத்துடன் இணைந்து செயல்படுத்த பல கட்டமைப்புகள் உள்ளன.
8. ஜாவாவில் எழுதப்பட்ட நிரல்கள் பிற மொழியில் எழுதப்பட்டவற்றை விடவும் வேகமாக இயங்கக் கூடியது.
9. பொதிகளை இணைப்பதன் மூலம் வெவேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். பிடியெப் கோப்பு உருவாக்குவது முதல் வலைப்பக்கம் வடிவமைப்பு வரை பலவற்றிற்கு பொதிகள் உள்ளன.
10. இது இலவசமாகக் கிடைக்கக் கூடியது. கட்டற்ற வகையைச் சேர்ந்தது.
11. இதைச் சார்ந்து பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதனுடன் இணைந்து இயங்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டவையும் உண்டு.
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஜாவா/முக்கியத்துவம்&oldid=13696" இலிருந்து மீள்விக்கப்பட்டது