உள்ளடக்கத்துக்குச் செல்

தகவல் காலமும், இணையமும்

விக்கிநூல்கள் இலிருந்து

இருண்டகாலம், கற்காலம் செம்புக்காலம் என மனிதகுல வரலாற்றில் நாம் தெரிந்து கொண்டு இருப்போம் தான். ஆனால் அது என்ன தகவல் காலம் (Informatica Time) என நம்மில் பலர் கேட்க நேரிடும், அவர்களுக்காக இந்த பக்கம்.

தகவல் காலம் என்றால் என்ன?

[தொகு]

தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்தக்காலம் அளப்பரிய தொழில் நுட்பங்களைக் கொண்டு உள்ளது. ரேடியோ தொழில் நுட்பம் மூலம் உலகின் எந்த ஒரு மூலையிலும் உள்ள நபருடன் பேசிக் கொள்கிறோம். அதைப் போலச் செய்திகளைக் கடிதம் மூலம் தெரிவிக்கும் காலம் போய் மின்னஞ்சல் மூலம் தொடர்பைக் கொண்டு உள்ள காலம் தற்போது நடை பெற்றுக் கொண்டு உள்ளது. இதையே ‘தகவல் காலம்’ என அழைக்கிறோம்.

அளப்பற்ற ஆற்றல் கொண்ட இணையம்:

[தொகு]

இணையம் மூலம் உலகில் உள்ள அனைத்துத் தகவல் வளங்களும் ஒன்று சேர்ந்து உள்ளது எனலாம். நமது நூலகம் சிறிய அளவிலான நூல்களின் தொகுப்பையே கொண்டு உள்ளது. ஆனால் இணையமோ மிகப் பெரிய நூலகம் எனலாம். இதன் மூலம் அனைத்து விதமான தகவல்களும் நமது கணினியைச் சென்று அடைகின்றன. ஒரு கணினியைப் புத்தகம் எனக் கொண்டால் அதில் இருக்கும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு வரவே முடியாது. எண்ணற்ற பக்கங்கள் இருக்கின்றன. இவ்வாறு இருக்கும் பக்கங்களையே நாம் இணையப் பக்கங்கள் என்கிறோம். kll'

தகவல் காலத்தில் விக்கியின் உருவாக்கம்:

[தொகு]

இவ்வாறு இருக்கும் இணையப் பக்கங்கள் அவரவர் சார்ந்த பக்கங்களையே கொண்டு இருந்தன. ஆனால் ஒரு விசயத்தைப் பற்றிப் பலர் பேசும் போது அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு மேலும் வலுப்பெருகின்றது எனலாம். மேலும் அந்த விசயத்தைப் பற்றி மேலோட்டமான அறிவு உட்சென்று ஆராய்ந்த அறிவாக மாறும். இதையே நமது விக்கி தளங்களின் மூலம் நாம் செய்ய விளைகிறோம். ஒரு பக்கத்தை இடத்தால், அறிவால், உள்ளுணர்வால், அனுபவத்தால் நிரப்புகிறோம் எனலாம். பங்களிப்பார்கள் என்போர், விக்கி தளத்தைப் பற்றிச் சிறிய அறிவு கொண்ட நபர் கூட ஒரு பங்களிப்பாளர்தாம். அவரையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம். ஒருவர் விக்கி என்னும் பெயரைக் கேட்டு இருந்தாலே அவரையும் நாம் ஒரு விக்கி பக்கத்தின் பங்களிப்பாளராக கொள்கிறோம் எனலாம். இதன் மூலம் ஒரு அறிவு சார்ந்த, ஒரு இணக்கம் சார்ந்த சமுதாயம் உருவாகிறது. இந்தச் சமுதாயத்தை நாம் விக்கி சமுகம் என்கிறோம்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=தகவல்_காலமும்,_இணையமும்&oldid=16512" இலிருந்து மீள்விக்கப்பட்டது