தனியன்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

--வெ.ராமன் 08:26, 29 ஜூன் 2006 (UTC)

     தனியன்கள்

   உடையவர் அருளிச் செய்தது

      நேரிசை வெண்பா

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே!*
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்*-பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசே கரனென்றே கூறு

   மணக்கால் நம்பி அருளியது

    கட்டளைக் கலித்துறை

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று* அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன்* மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்*
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே 

  குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=தனியன்கள்&oldid=3495" இருந்து மீள்விக்கப்பட்டது