தமிழ் வழி ஆங்கில இலக்கணம்
Jump to navigation
Jump to search
- எந்த ஒரு மொழியும் வாக்கியங்களாகப் பேசப்படுகின்றன அல்லது எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தைகளால் ஆனது. ஒவ்வொரு வார்த்தையும் எழுத்துக்களால் ஆனது. இவை அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்படுவதினால் அவற்றிற்கான முழுமையைப்பெறுகின்றன. ஒரு மொழியைப்பிழையின்றி மோழவும் எழுதவும் இலக்கணம் தேவைப்படுகிறது.
- தாயை அம்மா என்றழைக்கிறோம். தந்தையை அப்பா என்றழைக்கிறோம். தாயை அப்பா என்றும் தந்தையை அம்மா என்றும் யாராவது அழைக்கிறோமா? ஆகவே ஆரம்பத்திலிருந்தே உறவு முறைகளையும், பொருட்களின் பெயர்களையும், பண்டங்களின் பெயர்களையும் எவ்வளவு எளிதாக மனதில் இருத்திக்கொள்கிறோம். அதுபோலவே, ஆங்கில இலக்கணத்தையும் ஆர்வமுடன் கற்றால் பிழையின்றி ஆங்கில மொழியைப் பேசவும் எழுதவும் செய்யலாம்.
- ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை வாக்கியங்களாகும்; அதாவது சென்டன்சஸ் sentences.
- இந்த வாக்கியங்கள் அடிப்படையாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
- 1. அறிக்கை வாக்கியம் statements -(ஸ்டேட்மென்ட்ஸ்)
- 2. கேள்வி வாக்கியம் Interrogative sentence -(இன்டெராகேட்டிவ் சென்டன்ஸ்)
- 3. வியப்பு வாக்கியம் Exclamatory sentence -(எக்ஸ்க்ளமெட்டரி சென்டன்ஸ்)
- 4. கட்டளை வாக்கியம் Imperative sentence -(இம்பரேட்டிவ் சென்டன்ஸ்)