தவம்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > துறவறவியல்

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் பிற உயிரிகளுக்கு தீங்கு செய்யாமலிருப்பதே தவத்தின் பொருளாகும்.


262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
தவம் மிகுந்த மனவுறுதி உடையவர்க்கே வாய்க்கும்.அத்தகைய உறுதியற்றவர்கள் தவத்திற்க்கு முயலுவது வீணாகவே முடியும்.


263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
தவத்தில் சிறந்த துறவிகளுக்காக கூட நம் சேய்யவேன்டிய தவத்தை மறக்க கூடாது.


264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.


266. தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.


267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.


268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.


269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.


270. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.


"https://ta.wikibooks.org/w/index.php?title=தவம்&oldid=9548" இருந்து மீள்விக்கப்பட்டது