திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது
தோற்றம்
--வெ.ராமன் 10:09, 12 ஜூன் 2006 (UTC)
திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி*
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்*
ஆயர் குலவேந்த னாகத்தாள்* தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத்தனள்*தென் திருமல்லிநாடி* செழுங்குழல்மேல்
மாலத்தொடைதென்னரங் கருக்கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி*அவள் தூயநற் பாதம்துணை நமக்கே.
ஆண்டாள் திருவடிகளே சரணம்