திருப்பொற் சுண்ணம்/உரை 113-120
ஞானக் கரும்பின் தௌ¤வைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானனைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
பதப்பொருள் :
பானல் - கருங்குவளை மலர் போன்ற, தடங்கண் - பெரிய கண்களையுடைய, மடந்தை நல்லீர் - இளம் பெண்களே, ஞானக் கரும்பின் தௌ¤வை - ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தௌ¤வானவனும், பாகை - அதன் பாகான வனும், நாடற்கு அரிய நலத்தை - தேடுவதற்கு அருமையான நம்மைப் பொருளானவனும், நந்தாத்தேனை - சுவை கெடாத தேனானவனும், பழச்சுவையாயினானை - முக்கனிகளின் சுவையானவனும், சித்தம் புகுந்து - மனத்தில் புகுந்து, தித்திக்க வல்ல கோனை - இனிக்க வல்ல தலைவனும், பிறப்பு அறுத்து - பிறவித்தளையை அறுத்து, ஆண்டுகொண்ட - ஆண்டுகொண்டருளின, கூத்தனை - கூத்தப் பெருமானுமாகிய இறைவனை, நாத்தழும்பேற - நாவில் வடுவுண்டாகும்படி, வாழ்த்தி - துதித்து, பாடி - பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.
விளக்கம் :
‘ஞானக் கரும்பு’ உருவகம். தௌ¤வு - சாறு, பாகு, அதனைக் காய்ச்சியது. தௌ¤வைவிடப் பாகு சுவையுடைய பொருள். எனவே, ‘தௌ¤வைப் பாகை’ எனப் பிரித்துக் கூறினார். தேன் நாளடைவில் கெடுதல் அடையும். ஒரு நாளும் கெடுதல் அடையாத இறைவனை ‘நாந்தாத் தேன்’ என்றார். பழச்சுவையாவது, மா பலா வாழையாகிய முக்கனியின் சுவை.
இதனால், இறைவன் சுவைப்பொருளாய்த் தித்திக்க வல்லவன் என்பது கூறப்பட்டது.