திருமழிசை ஆழ்வார் தனியன்கள்
தோற்றம்
--வெ.ராமன் 07:34, 31 ஜூலை 2006 (UTC)
திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்*
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்*
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து* தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க*- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்* மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்