தூயமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

தூயமொழி (Pure Language) என்பதற்கான நிலைப்படுத்தப்பட்ட வரைவிலக்கணங்கள் எதுவும் இதுவரை எங்கும் இருப்பதாக இல்லை. ஆனால் "தூயமொழி" என்பது பிறமொழிகளின் கலப்பற்ற ஒரு மொழி என்பது பலரிடையே காணப்படும் ஒரு கருத்தியல் ஆகும். உலகில் தூய மொழி எனும் கருத்தியல் தொடர்பாக பல்வேறு பார்வைகள் உள்ளன. தொன்மையான மொழி, தனித்துவமான கூறுகளைக் கொண்ட மொழி என வரையரை செய்யப்பட்ட மொழிகள் இருந்தாலும், தூய்மையான மொழி என இதுவரை ஏற்றுக்கொள்ளத்தக்க அல்லது நிறுவப்பட்ட எந்தவொரு மொழியும் உலகில் இல்லை. உலகில் மனித இனம் தோன்றி, குழுமங்களாக வாழத் தலைப்பட்ட காலங்களிலேயே, ஏதோவொரு வகையில் கருத்துப்பரிமாற்றங்களும் இடம் பெற்றே உள்ளன. அந்த கருத்துப்பரிமாற்றமே மொழி எனப்படுகிறது. சில அறிவியலாளர்கள் கருத்துப்பரிமாற்றத்தின் வளர்ச்சி நிலையையே மொழி என்றும் வரையரை செய்கின்றனர். இருப்பினும் மனித இனத்தின் கருத்துப்பரிமாற்றம் என்பது மனிதன் குடும்பமாக, குழுமமாக வாழத் தலைப்பட்ட காலம் தொட்டே தோற்றம் பெறத் தொடங்கிவிட்டது. ஒரு இனக் குழுமம் எப்போது இன்னுமொரு இனக்குழுமத்துடன் கருத்துப்பரிமாற்றங்களை பேணவேண்டியத் தேவை அல்லது கட்டாயம் ஏற்படுகிறதோ, அப்போதே அந்த இரண்டு இனக் குழுமங்களிடையேயான பேச்சு மொழிகளிலும், மொழிக்கலப்பு ஏற்பட்டுவிடுகிறது.

வரலாறு[தொகு]

உலகில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பின்னோக்கிப் பார்ப்போமானால்; மனித இனம் கற்காலம், செப்புக்காலம், வெங்கலக்காலம், இரும்புக்காலம் எனும் படிநிலை வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான காலத்தை கற்காலம் என அறிவியலாளர்கள் வரையரை செய்கின்றனர். அந்த கற்காலத்திற்கும் முன்பே, மனித இனம் குழுமமாக வாழத் தலைப்பட்டுவிட்டது. குழுமமாக வாழத் தலைப்பட்ட காலத்திற்கும் முன்பே மனித இனத்தின் மத்தியில் ஏதோவொரு வகையிலான கருத்துப்பரிமாற்றமும் நிகழத்தொடங்கிவிட்டது. மனித வாழ்வில் உணவு, உறக்கம் என்பதற்கு அடுத்ததாகவும்; உறைவிடம், உடை என்பவற்றிக்கு முன்னதாகவும் "உரையாடல்" முக்கியத்துவம் பெறுகிறது. எனவே உறைவிடம், உடை என்பவற்றிக்கு முன்பே மனிதன் பேசத் தொடங்கிவிட்டான் என கொள்ளமுடியும்.

மனித இனத்தின் வளர்ச்சி என்பது உறவு நிலையில் மட்டுமே அல்லாமல்; ஒன்றொன்றுடன் பகைமைக்கொண்டு ஒன்றையொன்று வெற்றிக்கொள்வதிலும், ஒன்றையொன்று அடிமைப்படுத்துவதிலுமே ஏற்பட்டுள்ளது. தோழ்வியைத் தழுவிய இனம் அடிமையாவதும், வெற்றிக்கொண்ட இனம் அதிகார வர்க்கமாக தோற்றம் பெறுவதும், உலக வரலாறு தொடர்ந்து இன்றுவரை கற்பித்துவரும் உண்மையாகும். அவ்வாறே மனித இனத்தின் ஆரம்பக் காலத் தோற்றத்தின் போதும், வெற்றிக்கொண்ட ஒரு இனக்குழுமம் தோற்ற இனக்குழுமத்தின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தத்தொடங்கியுள்ளன. அந்த ஆதிக்கத்தின் ஒன்றாக தாம் பேசிய பேச்சு மொழியை செல்வாக்கு மிக்க ஒரு மொழியாக, தோற்ற இனக்குழுமத்தின் மீது செலுத்தப்படுகிறது. அங்கே தோற்ற இனக்குழுமத்தின் மொழி செல்வாக்கற்ற மொழியாக மறையத்தொடங்குகிறது. இங்கே ஒரு மொழியின் மறைந்த நிலை என்பது முற்றாக மறைந்த நிலையல்ல. ஒரு குழுமத்தின் மொழி இன்னொரு பெரும்பான்மை அல்லது பலமிக்க குழுமத்தின் மொழியோடு கலந்து அல்லது பல சொற்களை உள்வாங்கிக்கொண்டு புதிய பரிணாமத்தைப் பெறுதலால் ஏற்படும் மாற்றம் ஆகும். இந்த மாற்றமே மொழி கலப்பும் ஆகும். பேசும் மொழி மட்டுமன்றி, ஒரு மொழியினருடன் தொடர்புடைய பழக்கவழக்கம், பண்பாடு, கலை போன்றனவும் அவ்வாறே ஒன்றுடன் ஒன்று செல்வாக்கு செலுத்தப்பட்டு புதியப் பரிமாணத்தில் தோற்றம் பெறத்தொடங்குகின்றன.

மொழி வளர்ச்சி[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=தூயமொழி&oldid=5545" இலிருந்து மீள்விக்கப்பட்டது