தொல்காப்பியம் உரை/நூல் மரபு

விக்கிநூல்கள் இலிருந்து

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:
உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12
மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18
உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216
ஆய்த எழுத்து (ஃ) = 1, முறையே மொத்தம் 247.
தொல்காப்பிய மரபின்படி, சார்பிற்றேற்றம் - 3, அளபெடை - 7, மொத்தம் = 256
அ, இ, உ, எ, ஒ - 1 மாத்திரை குற்றெழுத்து
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - 2 மாத்திரை நெட்டெழுத்து
3 மாத்திரை அளவி ஒலி இல்லை.
நீட்டம் தேவை என்றால் நீட்டி ஒலிக்கலாம் என்பது மரபு.
மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் ஆகும்.
உயிர் மெய்யோடு சேரும் போது, இயல்பு திரியாது.
மெய்யின் அளபு அரை மாத்திரை ஆகும்.
புள்ளியுடன், அகரம் சேர்ந்து ஒலித்த்ல், ஏனைய உயிருடன் சேர்ந்து ஒலித்தல் முறையாகும்.
வல்லெழுத்து என்பன க ச ட த ப ற.
மெல்லெழுத்து என்பன ங ஞ ண ந ம ன.
இடையெழுத்து என்பன ய ர ல வ ழ ள.
இவ்வகை எழுத்துக்கள் மெய்ம்மயக்கும்.
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் வரும்.
க ச ப என்னும் மூன்று எழுத்தும் முன்னர் வரும்.
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும்.
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் வந்தால்
தம்தம் இசைகள் ஒலிக்கும்.
ண னஃகான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் வரும்.
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் வரும்.
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்.
ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.
அ இ உ அம் மூன்றும் சுட்டு.
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.