தொல்காப்பியம் பைத்தான்வழி உரை
தொல்காப்பியத்தைப் பைத்தான் தொழில்நுட்பத்தோடு கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இந்தப் பாடம் ஒரு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது. அப்படி என்ன அனுபவம் எனும் எண்ணம் உருவாகின்றதா? அது தொழில்நுட்ப முறையிலான விளக்கமாகும். அது என்ன தொழில்நுட்ப விளக்கம் என்ற வினா எழுகின்றதா? அது மனித மொழியைப் போன்று கணினி மொழியாகிய பைத்தான் அடிப்படையிலான விளக்கமாகும். இப்படி விளக்குவதனால் என்ன நடக்கும். தொல்காப்பிய விதிகளை மையமிட்ட தொழில்நுட்பம் உருவாகும். தட்டச்சுப் பிழைகளைச் சரிசெய்யும் நுட்பம் இன்னும் பொலிவுறும். இக்கால மாணவர்கள் மொழியைப் பிழையுடன் எழுதி வருவது பெரும் மன வருத்தைத் தருகின்றது. அதுவும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உயிர், மெய், குறில், நெடில் எழுத்துக்களைக்கூட அவர்கள் கற்காமல் உயர்கல்வி வரை வந்திருக்கின்றனர். இது போன்ற நிலைகளை ஓரளவிற்கு எதிர்காலத்தில் குறைத்திட இது போன்ற கற்றலும் தேவைப்படும். தொழில்நுட்ப மேம்பாட்டில் விளையாட்டுக் குறுஞ்செயலிகள் உருவாக்கவும் இந்தக் கற்றல் மிக முக்கியமானதே. ஆகையால் இந்தக் கட்டுரை அதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. அதுமட்டுமின்றித் தொல்காப்பிய இலக்கணம் கணினி மொழிக்கு ஏற்ப எழுதப்பெற்றிருக்கும் சிறப்பையும் காணலாம்.
உள்ளடக்கம்
[தொகு]தொல்காப்பியம் பொது ஊழி ஆண்டிற்கு முன்பு 14இல் எழுதப்பெற்றதாக க.நெடுஞ்செழியன் [1]கூறியுள்ளார். இதனை எழுதியவர் தொல்காப்பியர். இவர் தொல்காப்பியத்தை மூன்று அதிகாரங்களாகக் கட்டமைத்துள்ளார். பேரா. க. பாலசுப்பிரமணியன் தொல்காப்பியம் [2] [3]எனும் இலக்கண நூல் முழுமையும் ஒருவரால்தான் எழுதப்பெற்றது என்றும், அதுவும் தமிழ்மொழியின் கட்டமைப்பைக் கூறும் இலக்கண நூல் என்றும் கூறியுள்ளமை கூர்ந்து நோக்கத்தக்கது. ஆகையால் தொல்காப்பிய இலக்கணத்தின் மூன்று அதிகாரங்களையும் கணினி மொழி அடிப்படையிலான விளக்கம் அளிக்கப்பெறும்பொழுது அதன் சிறப்பு மட்டுமின்றித் தமிழ்மொழிக்கான தொழில்நுட்பக் கருவிகள் அதிகம் உருவாகவும் வழிவகுக்கும் என்பதைத் தொடர்ந்து சில [4] ஆய்வுகளில் வலியுறுத்தி வரப்பெறுகின்றமையும் இங்குக் கூறுதல் தகும். பேரா.ந.தெய்வசுந்தரம், கணினி மொழியியல் அடிப்படையில் தொல்காப்பியத்தின் சிறப்பை இன்னும் தெளிவுப்படுத்தியுள்ளார் [5].
தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களால் ஆனது. அவை,
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- பொருளதிகாரம்
என்பனவாகும். இவற்றுள், எழுத்ததிகாரம்,
- நூன்மரபு
- மொழிமரபு
- பிறப்பியல்
- புணரியல்
- தொகைமரபு
- உருபியல்
- உயிர் மயங்கியல்
- புள்ளி மயங்கியல்
- குற்றியலுகரப் புணரியல்
ஆகிய ஒன்பது இயல்களால் கட்டமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள், நூன்மரபு எழுத்ததிகாரத்தின் முதல் இயலாக அமைந்துள்ளது. இந்த இயல் தமிழ் மொழியமைப்பைப் பேசும் தொடக்கப்புள்ளியாகும். ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்க எடுக்கும் முதல் அளவுகோல் எழுத்தறிமுகமாக இருக்குமல்லவா? அதுபோல் தொல்காப்பியர் நூன்மரபு எனும் இயலை அமைத்துள்ளார். இங்குப் புலியூர்க் கேசிகனின் உரை அமைப்பில் உள்ளமை போன்று,
- எழுத்தின் வகை
- மாத்திரை
- எண்
- வடிவம்
- மெய்ம்மயக்கம்
- பிற மரபுகள்
ஆகிய ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கமாக அறிவோம்.
தொல்காப்பிய நூன்மரபுப் பகுதிகளை இன்னும் பைத்தான் கணினி அடிப்படையில் எழுதவும் புரிந்துகொள்ளவும் திறமூலத் தமிழ் நூலகத்தை நிறுவும் செயல்பாட்டை முதலில் அறிவோம். அப்பொழுதுதான் பைத்தான் மொழியில் எழுதி, பிரிக்க, வேறு செயல்பாட்டைச் செய்துபார்க்க முடியும். ஆகவே முதலில் அதுபற்றிப் பார்ப்போம். !pip install Open-Tamil ஐயா, இது என்ன? இதனைக் கொஞ்சம் விளக்குங்கள். !pip install Open-Tamil [8] என்ற குறியீடு, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நூலகத்தை உங்கள் கணினியில் நிறுவுகிறது. இந்த நூலகம், தமிழ் எழுத்துக்களை உருவாக்க, படிக்க, எழுத, செயலாக்கத் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் வழங்குகிறது. இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகத்தை நிறுவலாம். பின்னர், இந்த நூலகத்தைப் பயன்படுத்தி, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட குறியீட்டை எழுதலாம். இந்தக் குறியீட்டை உங்கள் கணினியில் நிறுவ, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்: உங்கள் கணினியில் ஒரு கட்டளைப் பதிவு நிரலாக்கியைத் திறக்கவும். !pip install Open-Tamil என்ற குறியீட்டை உள்ளிடவும். Enter விசை அழுத்தவும். இந்தக் குறியீட்டை நிறுவிய பின்னர், உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகம் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
படம் - 1, பைத்தான் - !pip install Open-Tamil சரி ஐயா, நிறுவி விட்டேன்.
- -*- coding: utf-8 -*-
ஐயா, இது எதற்கு?
- -- coding: utf-8 -- என்ற குறியீடு, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டுத் தொகுப்பு ஆகும். இது, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் அனைத்து எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்களுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் என்பதை அறிவிக்கிறது. இது, பைத்தான் மொழியின் வார்த்தைகளையும் கட்டளைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்படுவதற்கு உதவுகிறது.
import tamil ஐயா, இது என்ன? import tamil என்ற குறியீடு, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நூலகத்தை இறக்குமதி செய்கிறது. இந்த நூலகம், தமிழ் எழுத்துக்களை உருவாக்க, படிக்க, எழுத, செயலாக்கத் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் வழங்குகிறது.
இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகத்தை நிறுவலாம். பின்னர், இந்த நூலகத்தைப் பயன்படுத்தி, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட குறியீட்டை எழுதலாம். இந்தக் குறியீட்டை உங்கள் கணினியில் நிறுவ, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்: உங்கள் கணினியில் ஒரு கட்டளைப் பதிவு நிரலாக்கியைத் திறக்கவும். !pip install Open-Tamil என்ற குறியீட்டை உள்ளிடவும். Enter விசை அழுத்தவும். இந்தக் குறியீட்டை நிறுவியபின்னர், உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். சரி ஐயா, நிறுவி விட்டேன்.
- -*- coding: utf-8 -*-
ஐயா, இது எதற்கு?
- -- coding: utf-8 -- என்ற குறியீடு, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டுத் தொகுப்பு ஆகும். இது, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் அனைத்து எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்களுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் என்பதை அறிவிக்கிறது. இது, பைத்தான் மொழியின் வார்த்தைகளையும் கட்டளைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்படுவதற்கு உதவுகிறது.
import tamil ஐயா, இது என்ன? import tamil என்ற குறியீடு, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நூலகத்தை இறக்குமதி செய்கிறது. இந்த நூலகம், தமிழ் எழுத்துக்களை உருவாக்க, படிக்க, எழுத, செயலாக்கத் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் வழங்குகிறது.
மேற்கூறிய அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட குறியீட்டை எழுதலாம். சான்றாக, பின்வரும் குறியீட்டைப் பயன்படுத்தி, "தொல்காப்பிய ஆசானுக்கு வணக்கம்" என்ற தமிழ்ச் சொல் தொடரை எழுதலாம்:
import tamil
print("தொல்காப்பிய ஆசானுக்கு வணக்கம்")
ஐயா, பைத்தான் என்றால் என்ன? அந்த மொழியின் அடிப்படைகளைக் கொஞ்சம் விளக்கமுடியுமா? பைத்தான் என்பது ஒரு கணினி மொழியாகும். இந்த மொழியைக் கூகுள், யூடியூப், முகநூல், பிட்லி, யாகூ நிலப்படம், யாகூ குழுமம், சோப், அல்ட்ரா சீக், லினக்சு வாரச் செய்தி, ரெட்ஹேட், டிக்க, இவன்ட்பிரைட், லேன்யார்ட், மிக்ஸ் பேனல், கோரா, பின்டிரசட், ரேட்டிட், பாத், இன்சடாகிராம், மொசில்லா நிறுவனம், சர்வே மங்கி, எல்பு, அசனா, சேக்கேன்டு, லைப்பு, வால்ட், டிச்சினி, கூகிள் அப் இஞ்ன், இவ் அன்லைன், கேம்ங் கனோனிக்கல் நிறுவனம், Rackspace, சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஐபிஎம், இன்டச்சிட்ரியல் லைட் மேசிக் பிக்சர், தேசிய வானூர்தியியல் விண்வெளி நிர்வாகம், ஹனிவெல் ஐரேபட், One Laptop Per Child (OLPC), டிச்கச்(disqus) ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது [10]. இதன்மூலம் இந்தப் பைத்தான் மொழியின் முக்கியத்துவத்தை உணரலாம். இந்த மொழியைக் கற்றுக்கொள்வது எளிதான ஒன்றேயாகும்.
இந்த மொழி இணைய மென்பொருள் (Web Application), மின்னஞ்சல் அலகிடல் (Email Parsing), வலையமைப்பு நிரலான் (Network Program), மேசைத்தளம் மென்பொருள் (Desktop Application), இணைய நெறிமுறை (Internet Protocol), கணினி நிருவாகம் (System administration), விளையாட்டுகள் (sports) ஆகிய பயன்பாட்டுத் துறைகளை உள்ளடக்கியுள்ளது [10].
இந்த மொழியினை எளிமையாகக் கையாளலாம். ஒரு நிரல் மொழி (அதாங்க புரோகிராமிங் லாங்குவேஜ்) படிக்க வேண்டும் என்றால், தரவு வகை (Datatype) தெரிந்திருக்க வேண்டும். இலக்கணம் (syntax) தெரிந்திருக்க வேண்டும். {, [, ; என்று பல உருவங்கள் கண் முன்னேயும் கனவிலும் வந்து போக வேண்டும் [11] எனப் பலரது கருத்து. ஆனால், தமிழைப் போல, ஆங்கிலத்தைப் போல – இயல்பாக அமைந்திருப்பதுதான் பைத்தானின் மிகப்பெரிய சிறப்பு. எடுத்துக்காட்டாக இரண்டு எண்களைக் கூட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இதுதான் நம்முடைய முதல் வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்வது? முதலில் இரண்டு எண்களின் மதிப்பைச் சொல்லி விடுங்கள்.
எண்1, எண்2 = 100, 90
என்றும் சொல்லலாம்.
எண்1 = 100
எண்2 = 90
என்று தனித்தனியாகவும் சொல்லலாம்.
புதியவர்கள் மிக எளிதாக நிரலைப் புரிந்து கொள்வார்கள்.
இப்போது வரும் விடையை அச்சிட்டுப் பார்க்க,
print(எண்1 + எண்2)
என்று கொடுத்தால் போதுமானது [11]. இப்பொழுது எளிமையாக விங்கிக்கொள்ள முடிந்தது அல்லவா. சரி ஐயா, மேலும், நூன்மரபு முதல் விதியைப் பைத்தான் அடிப்படையில் கூறுங்கள். இன்னும் ஆர்வமாக உள்ளது. ஆம். அன்பரே! கற்கும் ஆர்வத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டால் அனைத்தும் எளிது! இல்லை என்றால் கல்வி பாகற்காயாய்க் கசக்கும்.
சரி… சரி… இன்னொன்றையும் நீங்கள் அறிய வேண்டும். செய்யறிவு (AI) பற்றித் தெரியுமா?
கேள்விப்பட்டுள்ளோம் ஐயா.
செயற்கை நுண்ணறிவு என்றும், ஏ.ஐ. (AI) என்றும் கூறுவார்களே அதுதானே.
ஆம். அதில் கூகுள் பார்டு (BardAI) எனும் செய்யறிவு நுட்பம் சொன்ன விளக்கம்தான் நீங்கள் பைத்தான் மொழியின் ஒவ்வொரு வரியையும் புரிந்துகொண்டீர்கள்.
இனி, வரக்கூடிய விளக்கமும் அது இணையத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விளக்குவதையும் அறியுங்கள். அப்பொழுதுதான் இன்னும் பைத்தானின் நுட்பத்தை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நெடுஞ்செழியன் க., தொல்காப்பியர் காலம், https://newindian.activeboard.com/t59991225/topic-59991225/, last accessed 2023/10//14
- ↑ பாலசுப்பிரமணியன் க., தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, (2015)
- ↑ பாலசுப்பிரமணியன் க., தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு, சென்னை, (2017)
- ↑ தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)
- ↑ தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)