தொழிற்சாலைகள் சட்டம் 1948

விக்கிநூல்கள் இலிருந்து

தொழிற்சாலைகள் சட்டம் 1948[தொகு]

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த மிக முக்கியமான சட்டங்களுள் இதுவும் ஒன்று. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழ்நிலை , அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், அவர்களுக்கு அளிக்கபபடவேண்டிய விடுமுறைகள் ,மிகைநேரப்பணி , குழந்தைகள்., பெண்கள் மற்றூம் ஆண்களைப் பணியில் அமர்த்துவது, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் பற்றி இந்த சட்டம் விரிவாக எடுத்து உரைக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் என்ட்ரி 36 இன் கீழ் , மத்திய அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது.
இந்த சட்டத்தில் 120 பிரிவுகளும் 3 அட்டவணைகளும் உள்ளன.

பிரிவு -2[தொகு]

பிரிவு -2 கீழ்காணும் சொற்களை வரையறை செய்கிறது.
(a) ADULT : பதினெட்டு வயது நிறைவடைந்த ஒருவர் ADULT என அழைக்கப்படுகிறார்.
(b) ADOLESCENT : பதினைந்து வயது நிறைவடைந்த ஆனால் பதினெட்டு வயது நிறைவடையாத ஒருவர் ADOLESCENT என அழைக்கப்படுகிறார்
(bb) "calendar year" : ஜனவரி முதல் தேதியில் தொடங்கி அடுத்துவரும் பன்னிரு மாதங்கள் calendar year" எனப்படும்.
(c) "child" : பதினைந்து வயது நிறைவடையாத ஒருவர் "child" என அழைக்கப்படுவார்.
(cc) "competent person" :ஒருதொழிலகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய சோதனைகள். ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக தலைமை ஆய்வாளர் அவர்களால் நியமிக்கப்படுகின்ற ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு competent person என்று பெயர்.
(cb) "hazardous process"ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் அல்லது சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் செயல்முறைக்கு" hazardous process" என்று பெயர். இந்த செயல் முறை முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
(d) "young person" : "young person" என்ற சொல் , Child மற்றும் Adolescent ஆகிய இருவரையும் குறிக்கும்.
(e) "day": நள்ளிரவில் தொடங்கி தொடர்கின்ற 24 மணி நேரத்துக்கு "day"என்று பெயர்
(f) "week": சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்குகிற அடுத்த ஏழு நாள்கள் அடங்கிய கால அளவுக்கு ‘’week"என்று பெயர்.ஒரு தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் , வேறு ஒரு நாளின் நள்ளிரவில் தொடங்கும் ஏழு நாள்களைக் கொண்ட கால அளவையும் ஒரு வாரமாக அறிவிக்கலாம். எழுத்துமூலம் தர்ப்படும் இந்த அறிவிப்பு , அவர் குறிப்பிடும் பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.
(g) "power" இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்ற , மனிதன் அல்லது விலங்குகளால் உற்பத்தி செய்யப்படாத , மின் அல்லது வேறு வடிவமான ஆற்றல் .

"https://ta.wikibooks.org/w/index.php?title=தொழிற்சாலைகள்_சட்டம்_1948&oldid=16518" இலிருந்து மீள்விக்கப்பட்டது