நாணுத் துறவு உரைத்தல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > களவியல்

1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.


1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.


1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.


1134. காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.


1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.


1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.


1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.


1138. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.


1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.


1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.


"https://ta.wikibooks.org/w/index.php?title=நாணுத்_துறவு_உரைத்தல்&oldid=2858" இருந்து மீள்விக்கப்பட்டது