நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு

விக்கிநூல்கள் இலிருந்து

திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுத்தலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று பாடு மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை இண்டைக் குளத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே