நிரலாக்கம் அறிமுகம்/அணி

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இயற்கணிதத்தில் அணி (matrix) அல்லது தாயம் (இலங்கை வழக்கு) என்பது எண்களால் ஆன m வரிசை (அல்லது நிரை) களும் n நிரல்களும் கொண்ட ஒரு செவ்வகப்பட்டியல் ஆகும். அணிகளுக்கு இடையே பல்வேறு கணிதச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். நிரலாக்கம், படிமச் செயலாக்கம் (image processing), செயற்கை நரம்பணுப் பிணையம் (neural network), கோட்டுருவியல் (graph theory) உட்பட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு அணிகள் பயன்படுகின்றன.

நிரலாக்கத்தில் மாறிகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றுக்கு இடையே செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அணிகள் பயன்படுகின்றன. நிரல் மொழிகளில் அணி அடிப்படைத் தரவுக் கட்டமைப்பாக உள்ளது.