நிரலாக்கம் அறிமுகம்/உருக் கணம், சிறப்புச் சொற்கள், இனங்காட்டிகள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உருக் கணம் (character set)[தொகு]

ஒரு நிரல் மொழி ஆதரவு தரும் உருக்கள் அல்லது எழுத்துக்களே உருக் கணம் (character set) எனப்படுகிறது. தொடக் காலத்தில் ஆங்கில மொழிக்கான சீர்தரமான ஆசுகி (ASCII) எழுத்துக்களுக்கு மட்டுமே ஆதரவு இருந்தது, தற்காலத்தில் அனைத்து மொழி சீர்தரங்களையும் அடங்கிய ஒருங்குறி எழுத்துக்களுக்கு பெரும்பாலான மொழிகளில் ஆதரவு உண்டு.

சிறப்புச் சொற்கள் (keywords)[தொகு]

சிறப்புச் சொற்கள் (keywords) எனப்படுவை நிரலாகத்தில் பயன்படும் சொற்கள் ஆகும். இவற்றுக்கு நிலையான பொருள் உண்டு. இவற்றைப் பயனர்கள் மாற்ற முடியாது, இப் பொயர்களை பெயரிடுவதில் பயன்படுத்த முடியாது.

இனங்காட்டிகள் (identifiers/names)[தொகு]

நிராலாக்கத்தில் மாறிகள், மாறிலிகள், செயலிகள், வகுப்புகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் தனித்துவமான பெயர்களே இனங்காட்டிகள் ஆகும். எவ்வாறு பெயரிட வேண்டும் என்பதற்கு வரையறை உண்டு.