நிரலாக்கம் அறிமுகம்/உள்ளீடு வெளியீடு

விக்கிநூல்கள் இல் இருந்து

அனைத்து நிரல்களும் எதாவது ஒரு வகையான உள்ளீட்டையும் (Input) வெளியீட்டையும் (Output) கொண்டிருக்கும். பொதுவாக உள்ளீடு என்பது பயனர்களால் வழங்கப்படும் தரவுகளைக் குறிக்கும். வெளியீடு என்பது நிரல் உருவாகும் உற்பத்தி அல்லது தரவுகளைக் குறிக்கும்.

கட்டளை வரி இடைமுகத்தில் (command line interface) இருந்து தரவுகளை உள்வாங்குவதற்கான அனைத்து மொழிகளிலும் செயலிகள் உள்ளன. இத்தகைய நிரல்களில் என்ன திரையில் அச்சிடப்படுகிறதோ அல்லது கோப்புக்களில் சேமிக்கப்படுகிறதோ அவையே வெளியீடுகள் ஆகும்.

வரைகலை பயனர் இடைமுகத்தில் (graphical user interface) உள்ளீடு வெளியீடு கூடிய வசதிகளைக் கொண்டது. பல மொழிகளில் வரைகலை இடைமுகத்தை உருவாக்குவதற்கான நிரலகங்கள் உள்ளன.