நிரலாக்கம் அறிமுகம்/கோப்பு

விக்கிநூல்கள் இலிருந்து

கணினியில் தகவல்களை சேமிக்கவும் ஒழுங்கமைக்கவும் கோப்புக்கள் பயன்படுகின்றன. எழுத்துக் கோப்புக்கள், படிமக் கோப்புக்கள், executable கோப்புக்கள் எனப் பல வகை கோப்புக்கள் உண்டு. நிரலாக்கத்தில் தரவுகளை சேமிக்கவும் வாசிக்கவும் எழுத்துக் கோப்புக்கள் பயன்படுகின்றன. அதனால் எழுத்துக் கோப்புக்களையும் கையாளுவதற்கான வசதிகள் அனைத்து நிரல் மொழிகளிலும் உண்டு. கோப்புக்களை வாசித்தல், கோப்புகளில் தகவல்களைச் சேர்த்தல் அல்லது மாற்றல், கோப்புகளை உருவாக்குதல், நீக்குதல் ஆகியவை கோப்புக் கையாளுதல் செயற்பாடுகள்.