நிரலாக்கம் அறிமுகம்/சிக்கல்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

பின்வரும் சிக்கல்கள் நிரலாக்கரின் திறங்களை சோதிக்க, உயர்த்த உதவுகின்றன.

அகம்புறம்[தொகு]

பின்வரும் கேள்வி தொடக்க நிலை நிரலாளர்களுக்கானது. ஒன்றில் இருந்து நூறு வரை அச்சிடும் நிரல் ஒன்றை எழுதவும். ஆனால், மூன்றால் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு எண்ணுக்குப் பதிலாக "அகம்" என்று அச்சிடவும். ஐந்தால் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு "புறம்" என்று அச்சிடவும். மூன்றாலும் ஐந்தாலும் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு "அகம்புறம்" என்று அச்சிடவும்.

ஒரு தீர்வு (பி.எச்.பி)

<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
</head>
<body>
<?php

for($i = 1; $i<100; $i++)
{
	if($i % 3 == 0 && $i % 5 == 0)
	{
		echo $i . "அகம்புறம் " . "<br />";
	}
	else if($i % 3 == 0)
	{
		echo $i . "அகம் " . "<br />";
	}	
	else if($i % 5 == 0)
	{
		echo $i . "புறம் " . "<br />";
	}
	
}

?>

</body>
</html>

வரிசைப்படுத்தல்[தொகு]

ஒரு எண் அணியை (எ.கா $அணி = array(22, 5, 3434, 6, 43, 343)) சிறிதில் இருந்து பெரிதாக வரிசைப்படுத்தவும். நிரலாக்க மொழியில் உள்ள வரிசைப்படுத்தும் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்.


ஒரு தீர்வு (பி.எச்.பி) - Bubble Sort

<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
</head>
<body>
<?php

$test =  array(22, 5, 3434, 6, 43, 343);

for($i = 0; $i < sizeof($test); $i++)
{	
	for($j = 0; $j < sizeof($test) - 1; $j++)
	{
	   $current = $test[$j];
		$next = $test[$j+1];
		
		if($next < $current)
		{
			$test[$j] = $next;
			$test[$j+1] = $current;
		}		
	}

}
print_r($test);

?>

</body>
</html>

பகா எண்[தொகு]

ஒரு தரப்பட்ட எண் பகா எண்ணா என்று அறிந்து செல்லக் கூடிய ஒரு படிமுறையை நிறைவேற்றவும்.

தொடர் பெருக்கம் விடையின் கூட்டுத் தொகை[தொகு]

ஒரு தொடர் பொருக்க விடையில் இருக்கும் எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடவும். சரங்களைப் பயன்படுத்தாமல் செயவும். எ.கா

ஒரு சரத்தின் வரிசைமாற்றங்களை அச்சிடுக[தொகு]

ஒரு சரத்தின் எல்லா வரிசைமாற்ற வடிவங்களையும் அச்சிடுக.

சொற் தேடல்[தொகு]

மொழியில் builtin செயலிகளைப் பயன்படுத்தாமல், பின்வரும் சொற்தொடர்களில் இருந்து தரப்படும் சொல் எந்த எந்த இடங்களில் (positions) இல் வருகிறது என்று அச்சிடவும்.

  • சொற்தொடர்: "This sentence contains the needle in the haystack. Can you find the needles position."
  • சொல்: needle

அணி2 இல் உள்ள மதிப்புகள் அணி 1 இல் உள்ளதா[தொகு]

இரண்டு அணிகள் உள்ளன. அணி1 = 5, 23, 4, 77, 3. அணி2 = 3, 66, 23, 66, 4. அணி2 உள்ள மதிப்புகள் அணி1 இல் இருந்தால், அச்சிடவும்.