நிரலாக்கம் அறிமுகம்/சுருங்குறித்தொடர்

விக்கிநூல்கள் இலிருந்து

சுருங்குறித்தொடர் என்பது எழுத்து அல்லது குறியீட்டுத் தொடர்களில் தேவையான சில தோரணங்களை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு நிரலாக்கக் கூறு ஆகும். கருத்தியல் கணிமையிலும் சுருங்குத்தொடர்கள் ஒரு மொழியை விபரிக்க பயன்படுகின்றன. எ.கா [0-9] அனைத்து இலக்கங்களுக்கான சுருங்குறித்தொடர் ஆகும். பெர்ள் நிரலாக்க மொழியில் சுருங்குறித்தொடர்கள் ஒரு முதன்மையான பங்கு வகிக்கிறது.

எடுத்துக்காட்டு[தொகு]

பி.எச்.பி[தொகு]

<?php
// சுருங்குறித்தொடர் எடுத்துக்காட்டு

$subject = "இது ஒரு எ.கா வசனம், இதில் உள்ள இதுக்கள் எல்லாவற்றையும் ஒப்பி பிரி";
$pattern = '/இது/';
preg_match_all($pattern, $subject, $matches);
echo "<pre>";
print_r($matches);
echo "</pre>";

?>
Array
(
    [0] => Array
        (
            [0] => இது
            [1] => இது
        )

)