உள்ளடக்கத்துக்குச் செல்

நிரலாக்கம் அறிமுகம்/செயலி

விக்கிநூல்கள் இலிருந்து

கணிதத்தில் சார்புகள் போன்று செயலிகள் உள்ளீடுகள் பெற்று ஒரு விடையைத் தரும் அல்லது தொழிற்பாட்டைக் கொண்டிருக்கும். செயலிகளை ஒருமுறை எழுதி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செயலிக்கு ஒரு பெயரிட்டு அதனை மீண்டும் மீண்டு அழைத்துப் பயன்படுத்துவதால் நிரலாக்கப் பணி எளிதாகிறது நிரல் ஒழுங்கமைக்கப்படுகிறது, பராமரிப்பு இலகுவாகிறது.

பல மொழிகளில் செயலிகள் function என்ற சொல்லை முதலில் இட்டு, பின்னர் பெயரை இட்டு, பின்னர் அடைப்புக் குறிக்குள் அந்தச் செயலிக்கான கூற்றுக்களை விபரிப்பர்.

மதிப்பு மூலம் விளித்தல் (Call by Value), சுட்டு மூலம் விளித்தல் (Call by Reference)[தொகு]

ஒரு செயலிக்கு தரப்படும் தருமதிப்புகள் (arguments) இருவகைப்படலாம்: மதிப்புகள் (Values), முகவரிகள் (Addresses). முதலாவது வகை மதிப்பு மூலம் விளித்தல் என்றும் இரண்டாவது வகை சுட்டு மூலம் விளித்தல் என்று அறியப்படுகிறது. மதிப்பு மூலம் விளித்தலில் மூல மாறியின் மதிப்பை (it won't change the value of the original variable) மாற்றாது. சுட்டு மூலம் விளித்தல் மூல மாறியின் மதிப்பை மாற்றும்.

வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு வழிகளில் விளித்தல் செய்ய அனுமதிக்கின்றன. பல மொழிகளில் அடிப்படைத் தரவுகளை (primitive types) செயலிக்கு அனுப்பும் போது மதிப்பு மூலம் விளித்தல் ஆகவும், பொருட்களை (objects) அனுப்பும் போது சுட்டு மூலம் விளித்தல் ஆகவும் கையாழுகின்றன.

முதல் வகுப்புச் செயலி (first class function)[தொகு]

ஒரு செயலியை ஒர் அடிப்படைத் தரவு மாதிரி பயன்படுத்த முடியுமானால், அந்தச் செயலியை முதல் வகுப்புச் செயலி (first class function) என்பர். எ.கா ஒரு செயலியைப் பின்வரும் செயற்பாடுகளுக்கு உட்படுத்த முடியுமானால் அதனை முதல் வகுப்புச் செயலி எனலாம்.

  • செயலி வேறு ஒரு செயலியின் தருமதிப்புப்பாக விளித்தல் (passed as an argument)
  • ஒரு செயலியின் திரும்பும் மதிப்பாக (returned value) இருத்தல்
  • ஒரு மாறியில் இருத்தல் (assign to a variable