நிரலாக்கம் அறிமுகம்/நிரலாக்கப் பணிச் சூழல்
ஒரு நிரலை நாம் எழுதி இயக்குவதற்கு நாம் பயன்படுத்த விரும்பும் மொழிகளுக்கான பணிச் சூழலை அமைத்துக் கொள்வது அவசியமாகும். எ.கா நாம் சி மொழியில் நிரல் எழுதப் போகிறோம் என்றால் அதை இயக்க எமக்கு சி compiler தேவை. அதே போல நாம் பி.எச்.பி மொழியில் எழுதப் போகிறோம் என்றால் பி.எச்.பி மொழி அல்லது அதற்கான interpreter எமது கணினியில் அல்லது வழங்கியில் நிறுவிக் கொள்ள வேண்டும்.
நிரல்களை எழுதுவதற்கு உங்கள் மொழிக்கு ஆதரவு தரும் ஒர் ஒருங்கிணை விருத்திச் சூழல் (integrated development environment) கொண்ட ஒரு தொகுப்பியை (editor) தேர்தெடுத்துக் கொள்வது நன்று. இந்தத் தொகுப்பிகள் உங்கள் நிரலாக்கப் பணிக்கு பல்வேறு வழிகளில் மிகவும் உதவும்.
பி.எச்.பி
[தொகு]லினக்சில் பி.எச்.பியை apt-get கொண்டு நிறுவிக் கொள்லாம். விண்டொசில் பி.எச்.பியை நிறுவ XAMPP பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எசி.பி நிரல்களை எழுத நெற்பீன்சு (netbeans), புளூஃபிசு, பிடிரி ஆகியவை சில நல்ல தொகுப்பிகள்.
யாவா
[தொகு]அடிப்படை யாவா நிரல்களை எழுத உங்களுக்கு யே.டி.கே (JDK) எனப்படும் யாவா நிரலாளர் பொதியை நிறுவிக் கொள்ள வேண்டும். யாவாவுக்கு எக்கிளிப்சு, நெற்பீன்சு ஆகிய தொகுப்பிகள் பரந்த பயன்பாட்டில் இருப்பவை.