நிரலாக்கம் அறிமுகம்/முடிவுகள்
Jump to navigation
Jump to search
நிரல்கள் பொதுவாக வரிசையாக இயக்கப்படும். அவ்வாறு இயங்குபோது சில நிலைகளில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி வரும். சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் ஒரு வழியாலும், வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வேறு ஒரு வழியாலும் நிரல் தொடர வேண்டி வரும். இதனையே முடிவுக் கூற்றுக்கள் அல்லது நிபந்தனைக் கூற்றுக்கள் (conditional statements) என்கிறோம்.
இந்தக் முடிவுக் கூற்றுக்கள் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் உண்டு. இதன் முதன்மை வடிவம் if then else (இப்படி என்றால் அல்லது) ஆகும்.
if (நிபந்தனை 1) { -- நிரல் கூற்றுக்கள் 1 } elseif (நிபந்தனை 2) { -- நிரல் கூற்றுக்கள் 2 } else { -- நிரல் கூற்றுக்கள் 3 }
இப்படி (நிபந்தனை1) என்றால் { -- நிரல் கூற்றுக்கள் 1 } அல்லதுஇப்படி (நிபந்தனை2) என்றால் { -- நிரல் கூற்றுக்கள் 2 } அல்லது { -- நிரல் கூற்றுக்கள் 3 }