நிரலாக்கம் அறிமுகம்/மென்பொருள் விருத்திச் சுழல் வட்டம்

விக்கிநூல்கள் இலிருந்து

பாரிய மென்பொருட்களை விருத்தி செய்வது என்பது ஒரு சிக்கலான செயற்பாடாகும். சில மென்பொருட்கள் சரியாகத் தொழிற்படுவது என்பது மிக முக்கியமானது. ஆகையால் மென்பொருட்களை விருத்திசெய்வதற்கென சீர்தரங்களும் வழிமுறைகளும் உண்டும். அவற்றில் ஒன்றே மென்பொருள் விருத்திச் சுழல் வட்டம் ஆகும். இது மென்பொருளை விருத்தி செய்வதில் இருக்கும் செயற்பாடுகளை மேல்நிலையில் விளக்குகிறது.

செயற்பாடுகள்[தொகு]

  • தேவைகள் அறிந்தல், தேவைகள் பகுப்பாய்வு (requirements gathering and analysis)
  • வடிவமைப்பு (design)
  • நிறைவேற்றுதல் (implementation)
  • சோதனை (testing)
  • நிறுவுதல் (deployment)
  • பராமரிப்பு (maintenance)
  • ஆவணப்படுத்தல் (தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவது)

மேற்க்கண்ட செயற்பாடுகள் பெரும்பாலும் எல்லா நிரலாக்க செயற்றிட்டங்களிலும் இருக்கும் என்றாலும், செயற்திட்ட மேலாண்மை, மென்பொருள் விருத்தி முறைமை ஆகியவை பெரிதும் வேறுபடும். எ.கா இசுக்கிரம் (scrum).

முக்கிய ஆவணங்கள்[தொகு]

  • மென்பொருட் தேவைகள் குறிப்பீடு - (software requirements specification) (சீர்தரங்கள்: ஐஇஇஇ - IEEE 830)
  • மென்பொருள் வடிவமைப்பு விபரிப்பு - (software design description)
  • மென்பொருள் பரிசோதனைத் திட்டம் - (software test plan)
  • மென்பொருள் செய்ற்திட்ட மேலாண்மைத் திட்டம் - (software project management plan)
  • பயனர் கையேடுகள், ஆவணங்கள் - (user manual and documents)
  • நிறுவல்/விருப்பமைவுவாக்கம்/பராமரிப்பு ஆவணங்கள் - (installation/configuration/maintenance documents)