பருவினப் பொருளியல் என்றால் என்ன?
Jump to navigation
Jump to search
பருவினப் பொருளியல்(Macroeconomics) என்பது பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று நுண்பொருளியல்(microeconomics) ஆகும். ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்த்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP),வேலையின்மை விகிதம் ஆகியவற்றை குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்த்திட்டம், நாட்டின் நிதி கொள்கை(Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பை கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை(monetary policy), வணிக சுழற்சிகள்(Business cycles), பணவீக்கம்(inflation) மற்றும் பணவாட்டம்(deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும்.