பறவைகள்/குயில்

விக்கிநூல்கள் இலிருந்து

குயில் அழகாகப் பாடும் பறவை இனத்தைச் சேர்ந்தது.மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். இதனை அறியாத காகம் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். குயிலின் குஞ்சு குறிப்பிட்ட சில நாட்கள அப்பறவைகளின் கூட்டில் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலவே கட்டைக் குரலிலொலி எழுப்பும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி குயிலின் குரலைப் பெற்று விடும். குயில்களில் பல வகை உண்டு.

  1. 1. குயில்
  2. அக்கூ குயில்( ப்லைன்டிவ் குக்கூ-Plaintive cuckoo).
  3. கொண்டைக் குயில்('பைடு க்ரெஸ்டெட் குக்கூ’)
  4. வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird).
"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/குயில்&oldid=12864" இலிருந்து மீள்விக்கப்பட்டது