உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியபட்டர்

விக்கிநூல்கள் இலிருந்து

பாண்டியபட்டர் அருளிச் செய்தது

இருவிகற்ப நேரிசை வெண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம்-முன்னாள்

கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.


பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கம் எடுததூத - வேண்டிய

வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

"https://ta.wikibooks.org/w/index.php?title=பாண்டியபட்டர்&oldid=9363" இலிருந்து மீள்விக்கப்பட்டது